Vivekananda Quotes in Tamil – சுவாமி விவேகானந்தர் பொன் மொழிகள்

vivekananda quotes in tamil

History (வரலாறு)

சுவாமி விவேகானந்தர், 12 ஜனவரி 1863- இல் விஸ்வநாத் தத்தா மற்றும் புவனேஸ்வரி தேவி தம்பதியருக்கு பிறந்தார். அவருடைய முழுப்பெயர் நரேந்திரநாத் தத்தா. இந்தத் தொகுப்பில், சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள் (Vivekananda Quotes in Tamil) மற்றும் சுவாமி விவேகானந்தர் எண்ணங்களைக் காணலாம்…

Positive Vivekananda Quotes in Tamil

அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.


நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது


பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.


பலமே வாழ்வு. பலவீனமே மரணம்…!


மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகின்றான்.


சுத்தப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டிய தண்ணீர் தொட்டி உங்கள் மனமே.


 நீண்ட தூரம் ஓடிவந்தால்தான் அதிக உயரம் தாண்ட முடியும்.


துருப்பிடித்து தேய்வதைவிட உழைத்துத் தேய்வது மேலானது.


எதிர்காலத்தில் நாம் எப்படி இருப்போம் என்பது இப்போது நாம் செய்யும் காரியங்களை, எண்ணும் எண்ணங்களைப் பொறுத்தது.


இந்த உலகம் பெரியதொரு பயிற்சிக் கூடம். நம்மை வலிமைப்படுத்திக் கொள்வதற்காகவே இங்கு வந்திருக்கிறோம்.


தலையிலிருந்து கால்வரை ஒவ்வொரு நரம்பிலும் செயல் துடிப்பு வேண்டும்.


பெருமை, பட்டங்களைப் பெறுவதில் இல்லை. பட்டங்களைப் பெற தகுதியுடைவராக உருவாக்கிக் கொள்வதில்தான் இருக்கிறது.


உங்கள் திறமைகளின் மட்டத்துக்கு உங்கள் இலக்குகளைக் குறைக்காதீர்கள். அதற்குப் பதிலாக, உங்கள் திறமைகளை உங்கள் இலக்குகளின் உயரத்திற்கு உயர்த்துங்கள்.


உண்மையான முன்னேற்றம் என்பது மெதுவானது ஆனால் நிச்சயமானது.


நீங்கள் தூய்மையானவராக இருந்தால், நீங்கள் வலிமையானவராக இருந்தால், தனி ஒருவரான நீங்கள் இந்த முழு உலகத்துக்குச் சமனானவர்.


ஒருபோதும் முயற்சியே செய்யாதவரை விடப் போராடுபவர் சிறந்தவர்.


சுமைகளைக் கண்டு நீ துவண்டு விடாதே! இந்த உலகத்தைச் சுமக்கும் பூமியே உன் காலடியில்தான்!


இந்த உலகில் நீங்கள் வந்துள்ளதால் உங்கள் முத்திரை ஒன்றை விட்டுச் செல்லுங்கள்…!


Self Confidence Swami Vivekananda Quotes in Tamil

உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.


உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.


உன் மனசாட்சிதான் உனக்கு ஆசான், அதைவிட வேறு ஆசானில்லை.


நீ தியாகம் செய்யத் தயாராக இருந்தால் மட்டுமே உலகில் உள்ள மற்றவர்களை வெல்ல முடியும்.


எதையும் தெரியாது என்று சொல்லாதே. சாதிக்கும் துணிவோடு அஞ்சாத போர்வீரனைப் போலச் செயல்படு.


ஒரு நாளில் ஒரு முறையாவது உங்களுடன் நீங்களே பேசுங்கள், இல்லையெனில் இந்த உலகில் உள்ள ஒரு சிறந்த நபருடனான சந்திப்பை நீங்கள் தவறவிடக்கூடும்.


உங்களிடம் எல்லையற்ற பொறுமையும், விடாமுயற்சியும் இருந்தால், வெற்றி நிச்சயம் வரும்.


நீங்கள் மகத்தான பணியைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை வையுங்கள்.


Golden Words of Swami Vivekananda in Tamil

பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.


நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு


சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.


வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.


உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.


செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.


கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.


நாம் இப்போது இப்படி இருக்கும் நிலைக்கு நாம் தான் பொறுப்பு.


அரசியல் வாழ்க்கையிலும், சமூக வாழ்க்கையிலும் ஒருவன் சுதந்திரம் பெறலாம். ஆனால் ஆசைகளுக்கும், கோபத்திற்கும் அவன் அடிமையாக இருந்தால். உண்மையான சுதந்திரத்தின் தூய இன்பத்தை அவனால் உணர முடியாது.


ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன.


மரணத்தைப் பற்றிக் கவலைப்படாதே, நீ இருக்கும்வரை அது வரப்போவதில்லை. அது வரும்போது நீ இருக்கப்போவதில்லை பிறகு எதற்குக் கவலை?


பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்யவேண்டிய காரியம் தட்டிக்கொடுப்பது மட்டும்தான்.


படிப்பு வெறும் தீக்குச்சியைப் போன்றது, எந்தப் பிரச்சனையோடாவது உராயும்போதுதான் அதிலிருந்து சிந்தனை சுடர் ஏற்படுகிறது.


அன்பு ஒன்றே மிகப்பெரிய ஆயுதம். பெரிய பெரிய ஆயுதங்களால் வெல்ல முடியாத ஒருவனைக்கூட அன்பு என்ற ஒரே ஆயுதத்தால் வீழ்த்திவிடலாம்.


எதிர்காலத்தைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பது நிகழ்காலத்தையும் கெடுத்துவிடும், எதிர்காலத்தையும் கெடுத்துவிடும்.


உண்மையானவர்களும், அன்புடையவர்களும் யாருக்கும் அஞ்சத் தேவையில்லை.


உலகம் எவ்வாறு நடக்கின்றதோ உலகத்தோடு பொறுந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.


அன்பின் வலிமை, வெறுப்பின் வலிமையைவிட மிகப்பெரியது.


உங்கள் சொந்த ஆத்மாவைத் தவிர வேறு ஆசிரியர் இங்கே இல்லை.


மனதில் தைரியமும், இதயத்தில் அன்பும் உள்ளவர்கள் என்னுடன் வரட்டும். வேறு யாரும் எனக்குத் தேவையில்லை.


நீங்கள் அனைவரும் முதலில் உங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.


Motivational Quotes

இதயம் சொல்வதைச் செய். வெற்றியோ தோல்வியோ அதைத் தாங்கும் சக்தி அதற்கு மட்டும் தான் உண்டு.


வெற்றிகளைச் சந்தித்தவன் இதயம் பூவைப் போல் மென்மையானது தோல்வி மட்டுமே சந்தித்தவன் இதயம் இரும்பை விட வலிமையானது


தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து 1000 தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். லட்சியத்தை அடைய 1000 தடவை முயலுங்கள். அந்த 1000 தடவை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள்.


எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.


நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!” “உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!”


உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.


கோழையும், முட்டாளுமே “இது என் விதி” என்பான். ஆற்றல் மிக்கவனோ “என் விதியை நானே வகுப்பேன்” என்பான்.


உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே! நீ சாதிக்க பிறந்தவன் துணிந்து நில், எதையும் வெல்.


அடுத்தவனின் பாதையைப் பின்பற்றாதே. உன்னுடைய பாதையைக் கண்டுபுடி.


எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களைச் செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.


இந்த உலகில் நீங்கள் வந்துள்ளதால் உங்கள் முத்திரை ஒன்றை விட்டுச் செல்லுங்கள்.


ஒருவன் முன்னேற முதலில் தன்னம்பிக்கையும் அடுத்து இறை நம்பிக்கையும் அவசியம்.


இந்த உலகின் வரலாறு என்பது தங்களைத் தாங்களே நம்பிய ஒரு சில மனிதர்களின் வரலாறாகும்.


மனம் என்பது உடலின் சூட்சுமமான பகுதியாகும். நீங்கள் உங்கள் மனதிலும் வார்த்தைகளிலும் பெரும் பலத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.


நான் எதையும் சாதிக்க வல்லவன், என்று சொல்லுங்கள். நீங்கள் உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றதாகி விடும்…!


Vivekananda Quotes for Youth

பொய் சொல்லித் தப்பிக்காதே; உண்மையைச் சொல்லி மாட்டிக்கொள். பொய் வாழ விடாது; உண்மை சாக விடாது


உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.


ஏழைச் சிறுவன் கல்வியை நாடி வர முடியாவிட்டால் கல்விதான் அவனை நாடிப் போக வேண்டும்.


Vivekananda Quotes for Students

“பலவீனம்” இடையறாத சித்ரவதையாகவும், துன்பமாகவும் அமைகிறது.


எந்த வேலையையும், தன் விருப்பத்திற்கேற்றவாறு மாற்றுபவன், எவனோ அவனே அறிவாளி.


Vivekananda Kavithai in Tamil

எந்தக் குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ்.


சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.


அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும். ஆனந்தத்தைக் கொண்டு வந்து தந்தே தீரும்.


இருதயம் விரிவடைந்துள்ள இடத்தில்தான் உண்மை ஞானம் உதிக்கும். அந்த உண்மை ஞானம்தான் நம்பிக்கை.


Common Quotes

தீண்டாமையைத் தீவிர கொள்கையாகவும், உணவு உண்பதையே தெய்வமாகக் கருதும் வரை நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேற முடியாது.


தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே, இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.


கபடம் இல்லாத நாத்திகன் வஞ்சகனை விடச் சிறந்தவன் ஆவான்.


உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். ஆனால் நம் உள்ளத்தில் எழும் நச்சு எண்ணங்களைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்வதில்லை. ஆகவே உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.


பிறரிடமிருந்து நல்லதைக் கற்றுக் கொள்ள மறுப்பவன், இறந்தவனுக்கு ஒப்பாவான்.


மனிதனுக்கு, மன அமைதியைத் தருவதுதான், மதத்தின் அடிப்படை இலட்சியமாகும்.


பேச்சுத்திறமை என்பது சரியான இடத்தில சரியான சமயத்தில் சரியாகப் பேசுவது மட்டுமல்ல. தவறான வார்த்தைகளைப் பேசிவிட வேண்டும் என்று மனம் துடிக்கும்போது பேசாமல் இருப்பதும் தான்.


வழிபாட்டை விட எப்போதும் இனியதாகவும், சிரித்த முகத்துடனும் இருந்தால் அது கடவுளுக்கு மிக அருகில் கொண்டு போய்ச் சேர்க்கும்.


நாம் காட்டும் பணிவிற்கும், மரியாதைக்கும், பிரதிபலனாக ஏதேனும் ஒரு நன்மையைப் பெற வேண்டும் என்று எதிர்பார்ப்போம், எனில் நம்மிடம் உண்மையான அன்பு உருவாகாது.


மனிதனுக்குள் ஏற்கனவே புதைந்திருக்கும் பரிபூரணத் தன்மையை வெளிப்படுத்துவது தான் கல்வியாகும்.


உங்களுக்கு அறிவு இருந்தால், ஒரு பலவீனமான மனிதரைக் கண்டால், அவரைக் கண்டிக்காதீர்கள். உங்களால் முடிந்தால், அவருடைய நிலைக்குச் சென்று அவருக்கு உதவுங்கள். அவர் வளர வேண்டும்.


இதயம் எனும் புத்தகம் திறக்கப்பட்டவருக்கு வேறு புத்தகங்கள் தேவையில்லை.


Vivekananda Thoughts in Tamil 

நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று நான் சொல்கிறேன்.


அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே! கோபத்தை வெளிப்படுத்தும் முன் யோசிக்க மறந்து விடாதே!


கடன்களோடு வாழ்வதை விட இரவில் சாப்பிடாமல் படுப்பது நலம்.


இந்த உடலில் செயற்படும் அனைத்துச் சக்திகளும் உணவிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன. நாம் அதை அன்றாடம் காண்கிறோம்.


உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள், உங்கள் முன்னோர்களைப் பற்றி வெட்கப்படுவதற்குப் பதிலாக அவர்களைப் பற்றிப் பெருமிதம் கொள்ளுங்கள்.


ஆன்மீக வாழ்க்கைக்கு மிகப் பெரிய உதவி தியானம். தியானத்தில் நாம் எல்லாப் பொருட்களிலிருந்தும் விலகி, நம் தெய்வீகத் தன்மையை உணர்கிறோம்.

Credits / Sources

சுவாமி விவேகானந்தரை பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்பினால் இந்த இணைய தளத்திற்கு செல்லவும்…. Wikipedia

Main Post Image – Image by katemangostar on Freepik

Previous Article

Mattu Pongal Wishes in Tamil | மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்

Next Article

Good Night Positive Quotes in Tamil

You might be interested in …

bharathiyar quotes in tamil

Bharathiyar quotes in Tamil – பாரதியார் பொன்மொழிகள்

History (வரலாறு) பாரதியார், திசம்பர் 11, 1882-ல் சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். பாரதியாரின் முழுப்பெயர் சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி, இந்தத் தொகுப்பில், பாரதியார் பொன்மொழிகள் (Bharathiyar Quotes in Tamil) மற்றும் பாரதியார் கவிதைகள்-யை காணலாம்… Bharathiyar […]

life quotes in tamil

Life Quotes in Tamil – வாழ்க்கை கவிதைகள்

வாழ்க்கை கவிதைகள் தொகுப்பு: இந்தத் தொகுப்பில், வாழ்க்கை கவிதைகள் (Life Quotes in Tamil) மற்றும் வலிகள் நிறைந்த வாழ்க்கை கவிதைகள், தமிழில் நேர்மறை வாழ்க்கை மேற்கோள்கள், வாழ்க்கை அறிவுரைகள் மற்றும் பல வாழ்க்கை கவிதைகளைப் பார்க்கலாம்… Life Quotes in Tamil  வாழ்க்கையில் யாரையும் குறைவாக எடை […]

sad quotes in tamil

Sad Quotes in Tamil – சோக கவிதைகள்

சோக கவிதைகள் தொகுப்பு: இந்தத் தொகுப்பில், சோக கவிதைகள் (Sad Quotes in Tamil) மற்றும் காதல் வலி கவிதைகள், திருமண வலி கவிதைகள் மற்றும் பல சோக கவிதைகளைப் பார்க்கலாம்… Sad Quotes in Tamil என் விதி என்னவென்று தெரியவில்லை, எல்லா சோதனைகளையும் என்னிடமிருந்தே தொடங்குகிறான் […]