சோக கவிதைகள் தொகுப்பு:
இந்தத் தொகுப்பில், சோக கவிதைகள் (Sad Quotes in Tamil) மற்றும் காதல் வலி கவிதைகள், திருமண வலி கவிதைகள் மற்றும் பல சோக கவிதைகளைப் பார்க்கலாம்…
Sad Quotes in Tamil
என் விதி என்னவென்று தெரியவில்லை, எல்லா சோதனைகளையும் என்னிடமிருந்தே தொடங்குகிறான் இறைவன்.
சுயநலம் என்ற ஒன்று வந்துவிட்டால் ரத்த உறவாக இருந்தாலும் சரி மற்ற உறவாக இருந்தாலும் சரி ஒதுக்கப்படுகின்றன.
வாழ்வில் நன் பட்ட கஷ்டங்களைவிட நான் இழந்த சந்தோஷங்களே அதிகம்!!!
காயப்படுத்தும் போது கூட வலிக்கவில்லை. காயப்படுத்திவிட்டு அதை நியப்படுத்தும் போது தான் வலிக்கிறது
வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்டே இருக்கிறான். அதைப் போல இழந்துகொண்டே இருக்கிறேன். சில நேரம் அன்பையும், பல நேரம் நிம்மதியையும்.
பிறந்த நாளை நினைப்பவர்களை விட, ஏன்டா பிறந்தோம் என நினைப்பவர்களே அதிகம்! அதில் நானும் ஒருவன்/ஒருத்தி!.
அது என்னமோ தெரியல, நான் ஆசைப்பட்ட எதுவும் எனக்குக் கிடைச்சதும் இல்ல!! நான் பாசம் வச்ச யாரும் கடைசிவரை என் கூட இருந்ததும் இல்ல!
இழந்ததை எண்ணி வருந்தாதே என்று சொல்வது சுலபம்…. இழந்து துடிப்பவர்களுக்கு தான் தெரியும்… அது எவ்வளவு பெரிய வலி என்று!
சொல்ல முடியாத சோகங்களும், நினைவுகளும் ஒவ்வொரு மனதிலும் உண்டு… யாரும் மறந்து வாழ்வதில்லை மறைத்துத் தான் வாழ்கிறோம்.
என் ஏமாற்றத்திற்கு நீ காரணம் இல்லை, நான் உன்மீது வாய்த்த அதீத எதிர்பார்ப்பே காரணம்.
Sad Pain Quotes
மனதின் வலி வயிற்றுக்கு எப்படித்தான் தெரியுமோ? வலிகள் மறையும் வரை பசி எடுப்பதில்லை.
நான் ஆசைப்பட்டது எதுவும் கிடைக்காதபோது தான் தெரிந்து கொண்டேன் ஆசைப்படுவதற்கும் ஒரு தகுதி வேண்டும் என்று…
நான் தான் எல்லாரையும் முக்கியம்னு நினைக்கிறேனே தவிர, நான் யாருக்கும் முக்கியமில்ல
ஒவ்வொரு காயமும் பழகிப் போகிறேதே தவிர எந்தக் காயமும் ஆறுவதே இல்லை…
உலகத்திலேயே ரொம்ப கொடுமையான வலி, வலிக்காத மாறி நடிக்கிறது தான்.
வழியும், வேதனையும் சொன்னால் புரியாது, பட்டவனுக்குத்தான் தெரியும்.
ஒரு உயிருக்கு ஒரு முறை மட்டும் தான் மரணம். ஆனால் அந்த உயிரை நேசித்தவர்களுக்கு தினம் தினம் மரணம்!
ஏக்கங்களையும் எதிர்பார்ப்புக்களையும் சுமக்கும் இதயத்திற்குத்தான் தெரியும் ஏமாற்றத்தின் வலி என்னவென்று…
நம்ம மனசுக்கு பிடிச்சவங்க நம்மள “Avoid” பன்றாங்கனு தெரிஞ்சா அப்போவே அவங்கள விட்டு விலகிறனும்…! அதுக்கு அப்றம் நாம எவ்ளோ தான் பாசம் காட்டினாலும் அவங்க கடமைக்குத் தான் பேசுவாங்க..!
Sad Love Quotes
எனக்காகவும் ஒரு இதயம் துடிக்கும் என நினைத்திருந்தேன்… ஆனால் அதுவும் என்னிடம் நடித்துவிட்டு தான் சென்றது…
மனிதனின் மனதை புண்படுத்தும் சக்தி சில வார்த்தைகளுக்கு மட்டுமல்ல. சில மௌனங்களுக்கும் உண்டு.
உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத இடத்தில் சிரித்தால் என்ன? அழுதால் என்ன? இரண்டுமே ஒன்று தான்.
சண்டைகளே இல்லாத உறவுகளில்லை… இரண்டு, மூன்று நாட்களில் சமாதானத்திற்கு வராத அன்பில் எந்த உண்மையும் இல்லை என்பதே உண்மை.
தேவையானவர்கள் வந்தபின்… தேவையாய் இருந்த நாம்… தேவையற்றவர்களாகி விடுகிறோம்… சிலரிடத்தில்.
நம்மை அலட்சியமாக நினைக்கத் தோன்றும் அளவுக்கு அடிமையாகிவிட்டோம் என்று நினைக்கும் பொழுது சிரிப்பதா? அல்லது அழுவதா? என்று தெரியவில்லை?
ரத்த “சொந்தமே” நம்மள புரிஞ்சிக்காத போது பாதியில் வந்த “சொந்தம்” மட்டும் நம்மள புரிஞ்சிக்கவா போகுது!
“அன்பின் ஆழம் எவ்வளவு என்று பிரிவின் போது தான் உணர முடியும்” அதை உணர்கிறேன். உன்னிடம் பேசாமல் இருக்கும் இந்த நிமிடங்களில்.
உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத சிலரிடம் எவ்வளவு அன்பை கொட்டினாலும், அது வெறும் குப்பை போன்றே பார்க்கப்படுகிறது…
விலை மதிக்க முடியாத பாசங்கள் எல்லாம் வெறும் அலைபேசியோடு முடிகிறது!
ஒரு உயிருக்கு ஒரு முறை மட்டும் தான் மரணம். ஆனால் அந்த உயிரை நேசித்தவர்களுக்கு தினம் தினம் மரணம்!
நாம் பேசாவிட்டால் அவர்கள் வருத்தப்பட போவதில்லை… நம் இடத்திற்கு வேறு ஒருவரை தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள் அவ்வளவு தான்
Depressed Sad Quotes
எனக்கு என்னதான் விதியோ தெரியவில்லை, என்னுடைய எதிர்பார்ப்புகளுக்கு எதிர்மறையாகவே எல்லாம் நடக்கிறது என் வாழ்வில்.
அதிக வழிகளைத் தாங்கும் இதயம் ஒரு நாள் பொறுத்துக்கொள்ள முடியாமல் தன் இதய துடிப்பை தானே நிறுத்திக் கொள்ளும்… யாரிடமும் சொல்லாமல்…
வாழ்வதற்கு அசையுமில்லை, இறப்பதற்கு வழியுமில்லை.
உயிரோடு இருக்கிறேன் ஆனால் உடைந்து இருக்கிறேன் என்னவென்று தெரியாத பல காரணங்களால்.
எனக்கும் கடவுளுக்கும் மட்டும் தான் தெரியும் எனக்குள் உள்ள வேதனைகள்.
வருடம் மட்டும் மாறிக்கொண்டே இருக்கிறது, என் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை…
எப்படியெல்லாமோ வாழ வேண்டும் என ஆசைப்பட்டு, ஒரு கட்டத்தில் எப்படியாவது வாழ்ந்தால் போதும் என்ற மனநிலைக்கு தள்ளிவிட்டது, இந்த வாழ்க்கை.
என்னடா வாழ்கை இது… பேசுனா சண்டை வருது, பேசலைனா அழுக வருது நான் என்ன பாவம் செஞ்சனே தெரியல எல்லாரும் பாதியிலே பாசத்தை காமிச்சிட்டு பாதிலியே விட்டுப் போய்றாங்க…
என்னோட வலிய என்ன தவிர வேற யாராலும் உணர முடியாது…
வாழறதே கஷ்டம், அதைவிட கஷ்டம், நிறைய வழிகளோட சிரிச்சுக்கிட்டே வாழறது…
ஒதுக்குகிறார்கள் என்பது கூடத் தெரியாமல் ஏன் பேசவில்லை என்று கேட்டுக் கொண்டு இருக்கிறது இந்த அப்பாவி மனது
தேடித்தேடி சேகரித்த நினைவுகளிடமிருந்து, ஓடி ஓடித் தப்பிக்க முயல்கிறேன்; முடியவில்லை
Sad Life Quotes
என் மனம் வழிகளைச் சுமக்கிறது, என் புத்தி குழப்பங்களைச் சுமைக்கிறது. இதற்கிடையில் தான் நடக்கிறது என் வாழ்கை.
சூழ்நிலை மாறும்போது, சிலரது வார்த்தைகள் மாறும், ஏன் பலரது முகங்கள் கூட மாறும்.
விதியெனக் கடந்துவிடவும் முடியவில்லை, விதியேயென வாழவும் முடியவில்லை. இப்படிக்கு, வாழ்கை.
கிடைக்காதெனத் தெரிந்தும் நிம்மதியைத் தேடுகின்றோம்… நிலைக்காதெனத் தெரிந்தும் உறவுகளைத் தேடுகின்றோம்… தேடல் வாழ்கையெனத் தெரிவதற்குள் பலமுறை விழுந்து எழ வேண்டியிருக்கின்றது.
எல்லாருமே, அவங்க அவங்க விஷயத்துல கரெக்டா இருக்காங்க. நம்மதான் அவங்க மேல கண்முடித்தனமா பாசம் வச்சிட்டு அன்பு, பாசம்னு ஏமாந்து நாசமா போறோம்.
தேவையானவர்கள் வந்தபின்… தேவையாய் இருந்த நாம்… தேவையற்றவர்களாகி விடுகிறோம்… சிலரிடத்தில்.
நிரூபித்துக் கொண்டே இருப்பதை விடப் பேசாமல் இருப்பது நல்லது.
வாழ்க்கையில் எது ஒன்று அதிகம் இன்பம் தருகின்றதோ அதுவே சில வேளைகளில் அதிக துன்பத்தையும் தரும்!
தேவை முடிந்தவுடன் விலகும் நண்பர்கள்…!
சொத்து இருந்தால் உறவாடும் சொந்தங்கள்…!
பணம் இருந்தால் பாசம் காட்டும் பந்தங்கள் …!
இவர்களுடன் நான் இருப்பதை விட நான் அனாதையாக வாழ்வது மேல் …!
நாம் தேவை என்றால் நமது தவறுகள் மன்னிக்கப்படும், நாம் தேவை இல்லை என்றால் நமது தவறுகள் பெரியதாக்கப்படும்.
அழகில்லா உருவங்களை ஒதுக்காதீர்கள், அதற்குள்ளே ஒரு ஆன்மா தவித்துக்கொண்டு இருக்கிறது.
யாரிடமும் அதிகமாக அன்பு வைக்காதே… யாரையும் அதிகமாக நம்பாதே… அவரவர் தேவை முடித்தபின் மனசாட்சியே இல்லாமல் தூக்கி எறியப்படுவாய்
After Marriage Sad Quotes
பிடித்ததை பறித்துப் பிடிக்காததை கொடுத்துச் சந்தோசமாக வாழ் என்று சொல்கிறது இந்த வாழ்கை.
வலிக்கிறது என்று யாரிடம் சொல்ல…
நிறைவேறாத கனவுகளில் என் காதலும் ஒன்று.
என் வாழ்க்கையில் சந்தோஷத்திற்கு முற்றுப்புள்ளியும், சோகத்திற்கு தொடர் புள்ளிகளையும் வைத்துவிட்டார் இறைவன்.
உலகில் உண்மையான பாசத்திற்கு கிடைக்கும் இறுதி பரிசு கண்ணீர்.
After Marriage Sad Quotes for Women (பெண்கள்)
எத்தனை செல்லமாய் வளர்த்தாலும் என்ன! எத்தனை சோம்பேறியாய் இருந்தால் என்ன! எத்தனை பொறுப்பற்றுத் திரிந்தால் என்ன! அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது திருமதி எனும் பதவி!
கணவன் மட்டும் சரியாக அமையவில்லை என்றால் மனைவி என்பவள் எங்கு இருந்தாலும் அனாதை தான்.
கணவருக்காக அனைத்தையும் அனுசரித்து செல்லும் மனைவியைக் கணவன் மதிக்கத் தவறினால் அதைவிட வேதனை அப்பெண்ணிற்கு ஏதுமில்லை.
பிரசவ வழியைவிடக் கொடுமையானது கணவன் தன்னை புரிந்து கொள்ளாமல் இருப்பது தான்.
பார்வை இல்லாதவன் கையில் கிடைத்த ஓவியமும் பாசம் இல்லாத கணவன் கையில் சிக்கிய மனைவியும் ஒன்று தான். அதன் மதிப்பு என்றுமே அவனுக்குத் தெரியப் போவதில்லை.
கனவுகளைப் போலவே யாருக்கும் தெரியாமலே கலைந்து போகிறது, ஒரு சில பெண்களின் ஆசைகளும்.
After Marriage Sad Quotes for Men (ஆண்கள்)
தனக்காக அழுத்தப் பெண்ணையும், தன்னை அழவைத்த பெண்ணையும் ஆண்கள் ஒரு போதும் மறப்பதில்லை
Husband and Wife Sad Quotes
எதையும் சரியாய் தேர்ந்தெடுக்க தவறினால் அனுசரிப்பதை தவிர வேற வலி இல்லை.
மரணத்திற்கு சமம் தன் மனைவி/கணவன் வேறு ஒருவரின் அன்பிற்காக ஏங்கி தவிப்பது…
இரவில் கண் மூடித் தூங்கிய நாட்களைவிட கண் முடி அழுத்த நாட்களே அதிகம்…
அன்பை ரசிக்கத் தெரியாதவனுக்கு எந்தப் பேரழகி மனைவியானாலும் அவன் வாழ்கை சுமைதான்… ரசிக்கத் தெரிந்தவனுக்கு அழகற்ற மனைவி கூடத் தேவதை தான்.
தொலைக்கவில்லை ஆனால் தேடுகிறேன், நேற்று இருந்த உன்னையும் என்னையும்.
புரிதல் இருந்தால் பிரிவிற்கு அவசியம் இல்லை.
Sad Relationship Quotes
தேடும் போதெல்லாம் நாம் கிடைக்கிறோம் என்பதால் ஏனோ நம்மை அடிக்கடி தொலைக்கிறார்கள்.
பக்கபலமாக இருக்க வேண்டிய உறவுகள் எல்லாம் தவறான புரிதல்களால் நம்மைப் பலவீனப்படுத்தியே செல்கிறது, வார்த்தையாலும், செய்கையாலும்…
மீண்டும் கிடைக்குமா! நான் நானாக இருந்த அந்த அழகிய நாட்கள்?
நாம் நேசிக்கிற எதுவும் நம்மை நேசிப்பதில்லை.
உதடுகள் சிரித்தாலும் கண்கள் அழுவது இதயத்திற்கு மட்டுமே தெரியும். உணர்வுகள் இருந்தாலும் உயிரற்று வாழ்கிறேன்
Family Sad Quotes
சில உறவுகள் யோசித்து பேச வைக்கும்… சில உறவுகள் பேசவே யோசிக்க வைக்கும்.
இந்த உலகமே நிரந்தரம் இல்லாம இருக்கும் போது, இதுல இருக்கற உறவுகள் மட்டும் நிறமா இருக்கும்னு நினைக்கறது நம்மளோட முட்டாள்தனம்.
அடி படிவோம் என்று தெரிந்தே, சில இடங்களில் அன்பானது துளிர்விடுகிறது
தேடிவந்த உறவைத் தள்ளி விட்ட போது தெரியவில்லை… தேடி சென்ற உறவு தள்ளி விடும் பொது புரிகிறது. அதன் வழியும் வேதனையும்.
யாரோ ஒருவராய் இருந்தால் மறந்திருப்பேன்! உண்மையை நேசித்தவர் என்பதால் தான் உடைந்து நிற்கிறேன்!
Friendship Sad Quotes
காதலை மட்டும் அல்ல நட்பைத் தொலைத்தவனுக்கும் தெரியும் பிரிவின் வேதனை என்னவென்று.
புரியாத நட்பு அருகில் இருந்தாலும் பயனில்லை…
தினம் பேசும் மற்றவர்களின் வார்த்தைகளைவிட பேசாமல் நகரும் நண்பனின் மௌனம் கொடியது.
அன்று புன்னகை மட்டுமே வாழ்க்கையாக இருந்தது! இன்று நினைவுகள் மட்டும் வாழ்கை ஆகிவிட்டது, நண்பா நம் பிரிவினால்.
Sad Motivational Quotes
அழுவதால் கண்கள் சுத்தம் ஆகுமாம், பார்வை தெளிவாகுமாம், மன அழுத்தம் குறையுமாம். நன்றி சொல்லுங்கள் உங்கள் மனதை காயப்படுத்தியவருக்கு…
எதிர்பார்ப்பு இல்லாமல் வாழக் கற்றுக்கொள்கிறேன், ஏமாற்றகளை கண்டபின்.
ஆசைகள் எல்லாம் ஒரு நாள் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் மட்டுமே செல்கிறது, என் வாழ்க்கை.
நடக்காது எனத் தெரிந்தாலும் கிடைக்காது எனப் புரிந்தாலும் மனம் எதிர்பார்ப்பதை மட்டும் நிறுத்தவில்லை.
நமக்கான ஆறுதல் என்பது நம்மிடம் தான் உள்ளது… மறந்து போவதும் கடந்து செல்வதும்
Heart Touching Sad Quotes
மரணத்தை விடக் கொடியது அன்பிற்கு அடிமையை இருந்தோம் என் உணரும் போது…
ஒவ்வொரு இரவிலும் இடையிடையே கண் விழிக்கும் போது நியாபகம் வருவது, உன் முகமும் உன் நினைவுகளும்.
நீ எங்கு இருந்தாலும் என் நினைவு உன்னைச் சுற்றி தான் இருக்கும்.
யார் யாரையோ சந்திக்க கிடைக்கும் சந்தர்ப்பம், ஏனோ உன்னைக் காண மட்டும் கிடைக்காமல் போகிறது.
நத்தையை பார்த்துக் கற்றுக்கொண்டேன்… பிறக்கும் போதே சுமைகளும் என்னுடன் பிறந்ததென்று!
Credits / Sources
Main Post Image – Image by katemangostar on Freepik