Pongal Wishes in Tamil | பொங்கல் வாழ்த்துகள்

pongal wishes in tamil

About பொங்கல் (Pongal)வரலாறு

பொங்கல் (Pongal) என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும். பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை இந்து கடவுளான சூரிய தேவனுக்கும் இயற்கைக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. இந்தத் தொகுப்பில், பொங்கல் வாழ்த்துகள் (Pongal Wishes in Tamil)கலை காணலாம். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் (Iniya Pongal Nalvazhthukkal in Tamil).

Pongal Wishes in Tamil

புதுமை பொங்க, இனிமை தங்க… செல்வம் பொங்க, வளமை தங்க… அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.


வறுமை நீங்கிச் செல்வம்  பொங்கட்டும், வறட்சி நீங்கிச் செழிப்பு பொங்கட்டும், அறியாமை அகன்று அறிவு பொங்கட்டும், அனைத்தும் பொங்க என் மனம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


பிறக்கும் “தை”
வளத்”தை”
நலத்”தை”
செல்வத்”தை”
இன்பத்”தை”
கொடுக்கட்டும். அனைவருக்கும் இனிய “தை”த்திருநாள் நல்வாழ்த்துக்கள்.


உலக தமிழர்கள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்


இந்த இனிய பொங்கல் நாளில், உங்கள் வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற்று வாழ என் மனம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்


தித்திக்கும் கரும்பை போல உங்கள் வாழ்வு மகிழ்ச்சியில் இனிக்கட்டும். அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.


உறவுகளின் புன்னகை வீட்டில் பொங்க… இனம் புரியா இன்பம் மனதில் பொங்க… பொங்கட்டும் தைப்பொங்கல். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.


வெண்பொங்கலின் சுவையும், சர்க்கரை பொங்கலின் இனிமையும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியைத் தரட்டும். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.


தைப்பிறந்தால் வழி பிறக்கும்; தடைகள் தகரும்; தலைகள் நிமிரும்; நிலைகள் உயரும்; நினைவுகள் நிஜமாகும்; கதிரவன் விழிகள் விடியலை கொடுக்கும்; அவலங்கள் அகலும். என் இதயம் கனிந்த தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்


இனியவை எல்லாம் உங்கள் கரங்களில் சேரட்டும்… இனியதொரு நாளிலிருந்து… இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.


மண்ணை பொன்னாக்கி! உழைப்பை உரமாக்கி! வியர்வையை நீராக்கி! உலகுக்கு உணவளிக்கும் உழவன் திருநாள்.


Credits / Sources

பொங்கல் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்பினால் இந்த இணைய தளத்திற்கு செல்லவும்…. Wikipedia

Main Post Image – Image by katemangostar on Freepik

Previous Article

Krishna Quotes in Tamil – கிருஷ்ணர் பொன் மொழிகள்

Next Article

Life Quotes in Tamil – வாழ்க்கை கவிதைகள்

You might be interested in …

mattu pongal wishes in tamil

Mattu Pongal Wishes in Tamil | மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்

About மாட்டு பொங்கல் (Mattu Pongal) – வரலாறு மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் […]

kaanum pongal wishes in tamil

Kaanum Pongal Wishes in Tamil | காணும் பொங்கல் வாழ்த்துக்கள்

About காணும் பொங்கல் (Kaanum Pongal) – வரலாறு காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி […]

christmas wishes in tamil

Christmas Wishes in Tamil | இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

About Christmas (வரலாறு) கிறிஸ்து பிறப்புப் பெருவிழா அல்லது கிறிஸ்துமஸ் (Christmas) என்பது ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கக் கொண்டாடப்படும் விழாவாகும். இவ்விழா கிறிஸ்தவத் திருவழிபாட்டு ஆண்டில் திருவருகைக் காலத்தினை முடிவு பெறச்செய்து, பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படும் கிறித்து பிறப்புக் காலத்தின் தொடக்க நாளாகும். இந்தத் தொகுப்பில், […]