About மாட்டு பொங்கல் (Mattu Pongal) – வரலாறு
மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர். இந்தத் தொகுப்பில், மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் (Mattu Pongal Wishes in Tamil)-ஐ காணலாம். அனைவருக்கும் இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள் (Happy Mattu Pongal in Tamil).
Pongal Wishes in Tamil
உள்ளவரின் பிரியமான தோழனுக்கான பொங்கல். இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்
உறவுகள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்
விவசாயம் செழிக்கட்டும். விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரட்டும். இனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்
ஆயுள் முழுவதும் உந்தன் மடிப்பால் அருந்தினோம்! எங்களின் இரண்டாம் தாயும் நீயே! குடும்பம் செழிக்க உதவும் கோமாதாவும் நீயே! உன்னை வணங்கவே இந்தவொரு பண்டிகை. அனைவருக்கும் இனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்
விவசாயத்தின் தோழனாய், உழவனின் தொண்டனாய், வீரத்தின் அடையாளமாய் விளங்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்துவோம். இனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்
வருடம் முழுவதும் அயராது உழைக்கும் எருதுகளுக்கும், தன் ரத்தத்தையே பால் தரும் கோமாதாவிற்கும், தன் உழைப்பையே உணவாய் தரும் உழவர்களுக்கும் நன்றி செலுத்துவோம் இந்த மாட்டுப் பொங்கல் திருநாளில்.
சிங்கத்தைப் போல் சீறி வரும் காலையினை, சிங்கமெனப் பாய்ந்து அடக்குகின்ற காளையர்களுக்கு! இனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்
உழைத்துக் கழித்த உழவர்களுக்கு ஒரு நாள், உழவர் திருநாள். உழைத்துக் களைத்த உனக்கும் ஒரு நாள், மட்டுப் பொங்கல்.
Credits / Sources
மாட்டு பொங்கல் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்பினால் இந்த இணைய தளத்திற்கு செல்லவும்…. Wikipedia
Main Post Image – Image by storyset on Freepik