About காணும் பொங்கல் (Kaanum Pongal) – வரலாறு
காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் போன்ற வீர சாகசப் போட்டிகள் உட்படப் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறும். இந்தத் தொகுப்பில், காணும் பொங்கல் வாழ்த்துக்கள் (Kaanum Pongal Wishes in Tamil)-ஐ காணலாம். அனைவருக்கும் இனிய காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
Kaanum Pongal Wishes in Tamil
உறவுகளைப் போற்றவும் நண்பர்களை நேசிக்கவும் பெரியோரை வணங்கவும் தமிழர்கள் உருவாக்கிய தனிப்பெரும் பண்டிகை காணும் பொங்கல். அனைவருக்கும் காணும் பொங்கல் வாழ்த்துக்கள்
உழவுக்கு நன்றி சொன்னோம் பொங்கலன்று…
உழைத்த விலங்கிற்கு நன்றி சொன்னோம் மாட்டுப்பொங்கலன்று…
உன்னதமான உறவுக்கும் நட்பிற்கும் நன்றி சொல்லுவோம் காணும் பொங்கலன்று…
கலகலப்பான உறவுகளுக்கும் நட்பிற்கும் என் இனிய காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
என் அன்பும், பாசமும், நிறைந்த உறவுக்கு… இனிய காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
உற்றார்களின் அன்பு காலமெல்லாம் தொடரட்டும்…
உறவினர்களின் பாசம் காணுமிடமெல்லாம் தொடரட்டும்…
நண்பர்களின் நேசம் பிரிவு இல்லாமல் தொடரட்டும்…
பெரியோர்களின் பொற்பாதம் தொட்டு வணங்க ஆசி பெரும் உங்களுக்கு நன்மைகள் பிறக்கட்டும்…
உங்களைச் சூழ்ந்த தீமைகள் யாவும் இல்லையென்ற நிலை சிறக்கட்டும்…
உறவுகளைப் போற்றவும் நம்பர்களை நேசிக்கவும் பெரியோரை வாங்கவும் தமிழர்கள் உருவாக்கிய தனிப்பெரும் பண்டிகை காணும் பொங்கல். இனிய காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
பண்டிகை களங்களில் உறவுகளைக் காண வேண்டும் என்பதற்காகக் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இனிய காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
என் அன்பும், பாசமும், நிறைந்த உறவுக்கு… நட்புக்கு… இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்.
மங்களம் பொங்கட்டும்… வண்ணங்களாய் உங்கள் எண்ணங்கள் மிளிரட்டும்… காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
நம் உறவிற்கு உயிர் தரும் இந்நாளில் நம் உறவுகள் உயர்வு பெற உயிர் தந்த இறைவனை வேண்டிக்கொண்டு உயிரான உறவிற்கு இனிய காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
நம் உறவுகளை ஒன்றிணைக்கும் காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Credits / Sources
காணும் பொங்கல் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்பினால் இந்த இணைய தளத்திற்கு செல்லவும்…. Wikipedia
Main Post Image –Image by Creative_hat on Freepik