Good Night Positive Quotes in Tamil
குட் நைட் நேர்மறை மேற்கோள்கள் நமது மனதிற்கும், ஆன்மாவிற்கும், அமைதியையும் நம்பிக்கையையும் அளிக்கின்றன. அவை நமது நாளை முடிப்பதற்கும் மறுநாளை புதிய ஆற்றலுடன் தொடங்குவதற்கும் ஒரு சிறந்த வழியாகும். இந்தத் தொகுப்பில், நல்ல இரவு நேர்மறை மேற்கோள்கள் (Good Night Positive Quotes in Tamil), மற்றும் அதன் நன்மைகளைக் காணலாம்.
இன்று கைக்கொடுக்க யாரும் இல்லையே என்று கவலைப்படாதே. நாளை உனக்காகக் கைதட்ட உலகமே காத்திருக்கிறது…. இனிய இரவு வணக்கம்
நேற்று வந்த மேகங்கள் இன்று வானில் கிடையாது… இன்று வந்த சோகங்கள் நாளை நம்மைத் தொடராது..! இனிய இரவு வணக்கம்
ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் ஒரு எதிர்பார்ப்பு…! ஆனால் ஒரு நாளின் முடிவிலும் ஒரு அனுபவம்..! இதுதான் வாழ்க்கை… இனிய இரவு வணக்கம்
ஒரு நாள் உங்களுக்குப் பிடித்த மாதிரி உங்கள் வாழ்க்கை மாறும்… அது நாளையாகக் கூட இருக்கலாம்…. இனிய இரவு வணக்கம்
இனிய இரவு வணக்கம்… முடியும் வரை முயற்சி செய், உன்னால் முடியும் வரை அல்ல, நீ நினைத்ததை முடிக்கும் வரை…
பிரச்சனைகள் நம் கை மீறும்போது இறைவனை நம்பி…. நம்பிக்கையோடு இருக்க முயல்வோம்…! நல்லிரவாகட்டும்….
வாழ்க்கையில் கஷ்டங்கள் அதிகமாக வரவில்லை என்றால் பல விஷயங்கள் கடைசி வரை தெரியாமல் போய்விடும்… இனிய இரவு வணக்கம்
தூங்கும்போது அனைத்து கஷ்டங்களும் மறந்து போவதால் உறக்கம் என்பது கடவுள் கொடுத்த வரமே! இனிய இரவு வணக்கம்.
அனைவரின் வாழ்க்கையிலும் நாளை என்ற இரண்டாவது வாய்ப்பை இயற்கை தந்துள்ளது. இன்று தவறியதை நாளைச் சரி செய்து கொள்ளுங்கள். இனிய இரவு வணக்கம்.
தோல்விகளைக் கண்டு சோர்ந்துவிடாதீர்கள். ஏனெனில் நாளைய நாள் உங்கள் வாழ்க்கையின் அற்புதமான நாளாக அமையலாம். இனிய இரவு வணக்கம்.