History (வரலாறு)
கௌதம புத்தர், இவர் கி.மு 563க்கும், கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தார். இவருடைய முழுப்பெயர் மற்றும் இயற்பெயர் “சித்தார்த்த கௌதமர்”. புத்தர் நேபாளத்தில் உள்ள, லும்பினி என்னுமிடத்தில் பிறந்தார். . இந்தத் தொகுப்பில், புத்தரின் பொன்மொழிகளை (Buddha Quotes in Tamil) மற்றும் அவருடைய அறிவுரைகளைப் பார்ப்போம் ….
Pain Buddha Quotes in Tamil
எதை நீ அதிகம் விரும்புகிறாயோ அதுவே உன்னை அதிகம் காயப்படுத்தும்!
காயங்களோடு சிரிப்பது எளிதல்ல, அப்படி சிரிக்கத் தொடங்கிவிட்டாள், எந்த காயமும் பெரிதல்ல!
அளவுக்கு அதிகமாக யோசிப்பது தான் மகிழ்ச்சியற்ற தன்மைக்கான ஒரே காரணம்!
மாற்றம் ஒருபோதும் வலிமிகுந்ததல்ல, மாற்றத்தை எதிர்ப்பது மட்டுமே வலிமிகுந்தது.
ஆயிரம் உறவுகள் துணை இருந்தாலும், வாழ்வை தனியாகத்தான் எதிர்கொள்ள வேண்டும். அவரவர் பாதை, அவரவர் மனம், அவரவர் வாழ்க்கை.!
ஏதோ ஒன்றை இழப்பதன் மூலம், ஏதோ ஒன்றை பெறப் போகிறோம் என்று சமாதானம் அடையும் மனதில், இழப்பு இலகுவாகி நம்பிக்கை துளிர்விட ஆரம்பிக்கிறது.
ஆசைக்கும் அன்புக்கும் அடிமையாகாதீர்கள் ஏனெனில் இரண்டுமே உங்களை அடிமையாக்கிவிடும்…!
எவரொருவரும் உங்கள் வாழ்க்கைப் பயணத்தைப் புரிந்து கொள்ளப் போவதில்லை. நீங்கள் இங்கு வாழ்வது உங்களது வாழ்க்கையை வாழத்தானே தவிர ஒவ்வொருவரும் உங்களைப் புரிந்து கொள்வதற்காக அல்ல
Positive Thinking Buddha Quotes in Tamil
உலகமே நீ தோற்ப்பாய் என்றாலும் உன்னை நீ நம்பு.
தன்னை அறிந்தவன் வெற்றி, தோல்வி எது வந்தாலும் தலை வணங்காமல் வாழலாம்.
ஒரு கணத்தால் ஒரு நாளை மாற்ற முடியும். ஒரு நாளால் ஒரு வாழ்க்கையை மாற்ற முடியும். ஒரு வாழ்க்கையால் இந்த உலகை மாற்ற முடியும்.
தினமும் காலையில் நாம் புதிதாகப் பிறக்கிறோம். இன்று நாம் எதைச் செய்கிறோம் என்பது தான் மிகவும் முக்கியானது.
பறக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் முதலில், உங்கள் சுமையை வீசி ஏறியுங்கள்.
காத்திரு… நடக்க இருப்பது சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான காரணத்துடன் நடக்கும்.
அச்சம் என்பது தலைதூக்கி நிற்கும் வரை நாம் அடிமையாகத் தான் வாழ வேண்டியிருக்கும்…
இருளில் இருக்கிறேன் என்று கவலைப்படாதே, இருளும் விடியலை நோக்கித்தான் செல்கிறது.
நீ செல்வதற்கு பாதையைத் தேடாதே. பாதையை நீயே உருவாக்கு..
தோல்வியே அடையாத ஆயுதம்? பொறுமை.
ஒரு கதவு மூடப்பட்டால் அதை விடச் சிறந்த வழி ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் வாழ்க்கை எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்பதை சரியாக நீங்கள் தீர்மானித்துவிட்டால், அந்த வானத்தையும் நீங்கள் எட்டலாம். உங்களை யாராலும் தடுக்க முடியாது. ஆகையால், உங்கள் குறிக்கோள் என்ன என்பதை உணருங்கள்!
தவறான பாதையில் வேகமாகச் செல்வதை விட, சரியான பாதையில் மெதுவாகச் செல். எதற்கும் அவசரப்பட வேண்டாம். நேரம் வரும்போது அது நடக்கும்.
போரில் ஆயிரம் பேரை வெல்வதை காட்டிலும் சிறந்தது உன் மனதை நீ வெற்றி கொள்வது.
உங்கள் மனதை நீங்கள் ஆளுங்கள் இல்லாவிட்டால், அது உங்களை ஆளும்!
நீங்கள் எதை நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள். எதை உணர்கிறீர்கள், அதையே ஈர்ப்பீர்கள். எதைக் கற்பனை செய்கிறீர்களோ, அதையே உருவாக்குவீர்கள்!
எதற்கும் அஞ்சாதே, எதையும் வெறுக்காதே, யாரையும் ஒதுக்கத்தே, உன் பணியை ஊக்கமுடன் செய்.
சூரியனையும், சந்திரனையும் நம்மால் ஒப்பிட முடியாது. ஏனெனில் அவை அதற்குரிய நேரத்தில் தான் பிரகாசிக்கும். அதுபோலவே ஒருபோதும் உங்கள் வாழ்க்கையை மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள்.
கடந்த காலம் உங்களை இன்னும் சிறந்தவனாகத் தான் மாற்ற வேண்டும், கசப்பானவனாக அல்ல.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் உண்மையாகவே மாற்றத்தைக் கொண்டு வர விரும்புகிறீர்கள் என்றால், முதலில் அதற்கு உங்களது மனதில் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள்.
தோன்றிய அனைத்தும் ஒருநாள் அழியும். இது குறித்து வருந்துவது அறிவுடைமையாகாது.
மற்றவர்களைக் கைப்பற்றுவதை விட உங்களை நீங்களே கைப்பற்றுவது தான் மிகப்பெரிய இலக்கு.
மகத்தான வெற்றி என்பது இந்த உலகத்தை வெற்றி கொள்வதைக் காட்டிலும் உன் மனதை வெற்றி கொள்வதே மகத்தான வெற்றி.
எப்படி எதிர்வினையாற்றுவது என்று கற்றுக்கொள்ளாதீர்கள். எப்படி பதிலளிப்பது என்று கற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் கவனத்தை போட்டியிடுவதிலிருந்து பங்களிப்பு செய்வதற்கு நகர்த்தும்போது, வாழ்க்கை கொண்டாட்டமாக மாறுகிறது. மனிதர்களைத் தோற்கடிக்க முயற்சி செய்யாதீர்கள். அவர்களின் இதயங்களை வெல்ல முயற்சி செய்யுங்கள்.
தங்களை தாமே நம்பி, யாரிடமும் உதவி எதிர்பார்க்காமல், தங்களுக்கு தாமே உதவிகரமாக இருப்பவர் யாரோ அவரே வாழ்வில் மிக உயர்ந்த இடத்தை அடைகிறார்.
தான் ஒரு ஞானி என்று நினைக்கும் ஒரு முட்டாள் வெறும் முட்டாள். தான் ஒரு முட்டாள் என்று தெரிந்த முட்டாள் உண்மையில் ஒரு ஞானி.
ஆசையை வென்ற மனிதனை இந்த உலகத்தில் எவராலும் வெல்ல முடியாது.
எதிர்மறையான மனிதர்களிடமிருந்து விலகியே இரு. அவர்கள் ஒவ்வொரு தீர்விலும் பிரச்சனைகளை காண்பார்கள்.
தவறுச் செய்பவர்களை மன்னித்துவிடு ஆனால், அவர்களைத் திரும்ப நம்பும் அளவிற்கு முட்டாளாக இருக்காதே..!
உங்கள் வாழ்க்கையின் நோக்கம், உங்கள் நோக்கத்தைக் கண்டுபிடிப்பது. உங்கள் முழு மனதையும் கொடுத்து, அதைப் பெற வேண்டும்.
மகிழ்ச்சியாக இருப்பதற்கு இரண்டு வழி. சூழ்நிலைகளை மாற்றுவது. அல்லது உங்கள் மனநிலையை மாற்றுவது.
நேர்மை மிகவும் விலையுயர்ந்த பரிசு, மலிவானவர்களிடமிருந்து, அதை எதிர்பார்க்க வேண்டாம்.
எதிர்மறையான சூழ்நிலையில் நேர்மையாக இருக்க முடிந்தால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்
வலி தவிர்க்கப்பட முடியாதது. ஆனால், வேதனை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்கின்ற ஒன்று…!
நிம்மதிக்கான இரண்டு வழிகள். விட்டுக் கொடுங்கள். இல்லை விட்டு விடுங்கள்.
Buddha Life Quotes
உங்கள் மனம் தான் அனைத்துமே! நீங்கள் எதை நினைக்கிறீர்களோ, அதுவாகவே ஆகிறீர்கள்!
உங்கள் வாழ்க்கையைப் பற்றி முழுமையாக அறிந்த பின்னரும்கூட உங்களிடம் தொடர்ந்து அன்பு செலுத்துபவன் தான் உண்மையான நண்பன்.
ஒருநாள் உங்களது வாழ்க்கையை நீங்கள் திரும்பிப் பார்ப்பீர்கள். அப்போது ஒன்றுமே இல்லாத விஷயங்களுக்காக ஏன் இவ்வளவு கவலைப்பட்டோம் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.
நம் வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை என்பதை உணர ஆரம்பித்து விட்டால்… நமக்கு இருக்கும் ஆணவம் காணாமல் போய் விடும்.
தன் எதிரியாக இருந்தாலும் அவனுக்கும் நல்லதே நடக்க நினைப்பவன் தான் நல்ல மனம் படைத்தவன். அந்த மனம் கொண்டவனுக்கு நல்ல விஷயங்கள் தான் நடக்கும்.
உயிர் நண்பன் என்பவன் தக்க நேரத்தில் சரியான உதவிகளைச் செய்பவன் தான். அந்த நட்பை விட்டு விடக் கூடாது.
வீண் பேச்சால் தேவையற்ற சிரமம் வரும் என்பதை உணர்ந்து அதைத் தவிருங்கள்!
உங்கள் வாழ்நாளில் எதைச் செய்தாலும் திருப்தியுடன் செய்யுங்கள். அதுவே உங்கள் வாழ்வை அர்த்தம் உள்ளதாக மாற்றும்.
வாழ்க்கை என்றாலே துன்பங்களும், துயரங்களும், இருக்கத் தான் செய்யும். அது தான் நியதி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
இந்த நொடியைச் சந்தோசமாக வாழுங்கள். நிகழ்காலத்தில் சந்தோசமாக வாழ்வது தான் வாழ்க்கையை இனிமையாக மாற்றும்.
வாழ்வு என்பது சில நொடியில் முடிந்து போவதல்ல, ஒவ்வொரு நொடியையும் சந்தோசமாகத் திருப்தியாக வாழ்வதாகும்.
உன் வாழ்வில் உண்மையும், அன்பும், நிறைந்திருந்தால் எப்போதும் உன் வாழ்வு மகிழ்ச்சியாகவே இருக்கும்.
உணர்வோடு இருப்பது போலவே அதீத உணர்ச்சிகளில் இருந்து விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்.
உங்களை நீங்கள் முழுமையாக நேசித்தால் ஒருபோதும் மற்றவர்களை வெறுக்க மாட்டீர்கள்!
புயலுக்கு அசையாத பாறைபோல புகழ்ச்சிக்கு மயங்காமல் வாழுங்கள்.
நீ செய்த செயல்கள் ஒவ்வொன்றும், உன் நிழல் போல உன்னைத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அது நல்லதா இருந்தாலும், சரி கெட்டதாக இருந்தாலும் சரி.
நீங்கள் ஒருவரின் வாழ்வில் விளக்கேற்றினால், அது உங்கள் பாதையையும் பிரகாசமாக்கும்.
நமக்கு நடக்கும் அனைத்துக்கும் காரணம், நாம் நினைத்த, சொன்ன, அல்லது செய்தவற்றின் விளைவாகும். நம் வாழ்க்கைக்கு நாம் மட்டுமே பொறுப்பு.
எல்லோருடைய வாழ்க்கையும் நிரந்தரமற்றது. பிறகு ஏன் நிரந்தரமற்ற விடயங்களுக்காகக் கவலைப்பட வேண்டும்.
உங்கள் கடந்த காலத்தை அறிய விரும்பினால், உங்கள் நிகழ்காலத்தைப் பாருங்கள். உங்கள் எதிர்காலத்தை அறிய விரும்பினால், உங்கள் நிகழ்காலத்தைப் பாருங்கள்.
உண்மையைப் பேசுங்கள். உங்களால் முடிந்ததைக் கொடுங்கள். ஒருபோதும் கோபப்படாதீர்கள். இந்த மூன்று படிகளும் உங்களை இறைவனை நோக்கி வழிநடத்தும்.
மற்றவர்கள் சொல்வதைக் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். உங்களுக்கு மனநிறைவு, தெளிவு மற்றும் அமைதியைத் தரக்கூடியதை நீங்களே கண்டுணருங்கள். அதுவே நீங்கள் பின்பற்ற வேண்டிய பாதை.
யாரிடம் குறைவான ஆசைகளும், மன அமைதியும் உள்ளதோ அவர்கள் கவலையின்றி வாழ்கிறார்கள்.
வாழ்வில் நிலையான ஒரே விடயம் மாற்றம் மட்டுமே என்பதை நினைவில்கொள்ளுங்கள்.
உங்களுடன் நடக்க ஒரு நல்ல துணையை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், காட்டில் சுற்றித்திரியும் யானையைப் போலத் தனியாக நடந்து செல்லுங்கள். உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பவர்களுடன் இருப்பதை விடத் தனியாக இருப்பதே நல்லது.
குறை இல்லாதவன் மனிதன் இல்லை… அதைக் குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை.
மலை புயலுக்கு அசைந்து கொடுப்பதில்லை, அறிவாளிகள் புகழ்ச்சிக்கு அடிமையாவதில்லை.
பெருமையின் சிகரத்தை எட்டியதெல்லாம் வீழ்ச்சியடையும். தோன்றுவதெல்லாம் நிச்சயம் அழியும்.
தர்மம் : தேடிப்போய் செய்! உதவி : நாடி வருபவருக்குச் செய்!
அமைதியாய் இருப்பவன்முட்டாள் என்று எண்ணிவிடாதே… பேசுபவனை விடக் கேட்பவனே புத்திசாலி…
புகழ்ச்சி, இகழ்ச்சி இரண்டையும் பெரிதாக எண்ணி வருத்தப்படுவது கூடாது.
எல்லாமும் அழிவதை பார்த்துக் கொண்டே…, தன் வாழ்வு மட்டும் நிலையானது என்று எண்ணி மனித மனம் துன்பத்துக்கு ஆளாகிறது..
தனக்கு நிகழும் வரை எல்லாமே வேடிக்கை தான்.
எண்ணங்கள் ஈடேற வேண்டுமென்றால் நல்ல எண்ணங்களை மட்டுமே விதைக்கக் கற்றுக்கொள்
அவர் சொன்னார். இவர் சொன்னார். என்பதெல்லாம் போதும். உம் மனம் சொல்வதென்ன. சற்று நின்றே கேளும்.
நிம்மதியாக இருக்க ஆசைப்பட்டு எதையும் தேடி அலையாதே…! கிடைத்ததை அனுபவிக்கக் கற்றுக்கொள்… நிம்மதி உன்னைத்தேடி வரும்…!!
யாரையும் எதிரியாக நினைக்காதே… இல்லாவிட்டால், உனக்கு நீயே துன்பத்தைத் தேடிக் கொள்வாய்….!
கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு, உனக்கு நீயே கொடுத்துக் கொள்ளும் தண்டனை.
நடக்கும் முன்னே, நல்லதே நடக்கும் என்று நினைத்துக்கொள். நடந்த பின்னே … நடந்ததும் நல்லதற்கே என்று நினைத்துக்கொள்.
மகிழ்ச்சிக்கான 5 வழிகள். 1. கவலை கொள்ளாதீர்கள். 2. யாரையும் வெறுக்காதீர்கள். 3. முடிந்தவற்றை மற்றவருக்குக் கொடுங்கள். 4. யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள். 5. எளிமையாக வாழுங்கள்.
நிம்மதிக்கான இரண்டு வழிகள்: விட்டுக்கொடுங்கள் இல்லை விட்டுவிடுங்கள்.! பிறர் பொறாமைப்படும் அளவிற்கு வாழ ஆசையில்லை … பிறர் சபிக்காத அளவிற்கு வாழ்ந்தால் போதும்…
எப்போதுமே தவறான மனிதர்களால், சரியான பாடங்களை, வாழ்க்கை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.
நீங்கள் பாதையாக மாறும் வரை, நீங்கள் பாதையில் பயணிக்க முடியாது.
மௌனம் மற்றும் புன்னகை, இரண்டும் சக்திவாய்ந்த வார்த்தைகள். புன்னகை பல பிரச்சனகளை தீர்க்கும் வழி. மற்றும் மௌனம் பல பிரச்சினைகளை தவிர்க்கும் வழி.
கூர்மையான வாள்? கோபத்தில் கூறப்படும் வார்த்தை.
உங்கள் வாழ்நாளில் எதைச் செய்தாலும் திருப்தியுடன் செய்யுங்கள். அதுவே உங்கள் வாழ்வை அர்த்தம் உள்ளதாக மாற்றும்.
எல்லோரிடமிருந்தும் கற்றுக்கொள்… ஆனால் யார் வழியையும் பின்பற்றாதே…!
மகிழ்ச்சிக்கு பாதை இல்லை. மகிழ்ச்சியே பாதை.
ஆசைகள் அடம்பிடிக்கும் அதற்கு இடம் கொடுத்தால், துன்பத்தால் நெஞ்சில் தடம் பதிக்கும்…
உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்கும்போது வாழ்க்கை மிகவும் எளிதாகிறது.
எப்போதும் மகிழ்ச்சியுடன் இருங்கள்… துக்கத்தை எதிரியாகக் கருதிப் போரிடுங்கள்…!
வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே ஆகும்.
உலகத்தில் இருக்கும் எல்லா விஷயங்களை விடவும், உங்களை அதிகம் தொல்லை செய்வது உங்கள் எண்ணங்கள் மட்டுமே!
அனைத்துமே ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது! எனவே அதைக் கேள்வி கேட்பதை விட்டுவிட்டு அதன்மேல் நம்பிக்கை வையுங்கள்!
Common Quotes
ஆசையை ஒழித்தால் தாமரை இலை தண்ணீர் போலத் துன்பம் மனிதனை தீண்டுவதில்லை!
எளிமையாகவும், கண்ணியமாகவும் இருப்பதே பண்பட்ட மனிதனின் அடையாளம்.
தடைகள் இல்லாவிட்டால் மனம் நிதானத்தை இழந்து அகந்தைக்கு ஆளாகும்.
மலர்களின் மணம் காற்றடிக்கும் திசையெல்லாம் பரவும். ஆனால் நல்லோரின் புகழ் நாலாபுறங்களிலும் பரவும்.
பெண்களின் நிம்மதியே நாட்டின் நிம்மதி
புரிதல் எங்கே இருக்கிறதோ, அங்குத் தான் அன்பு பிறக்கும்!
தீமையை நன்மையால் வெல்லுங்கள், பொய்யினை உண்மையால் வெல்லுங்கள்.
அமைதியை விட உயர்வான சந்தோசம் இந்தப் பூமியில் வேறு ஒன்றும் இல்லை
மனதின் பிரச்னைகளை அறிந்து கொள்ளவும், சரி செய்யவும் தியானமே வழி.
அடக்கமின்றி நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட, ஒழுக்கமுடன் ஒருநாள் வாழ்வது சிறப்பு.
நோயற்ற வாழ்வே பெரிய பாக்கியம். திருப்தியே மிகப் பெரிய செல்வம்.
உங்களுடைய வார்த்தைகளால் ஒருவரை மற்றொருவருக்கு எதிராகத் திருப்புவது நல்லதல்ல.
பொய்யைத் திரித்துக் கூறி பிறர் மனம் நோகும் விதத்திலும் பேச வேண்டாம்.
பயனில்லாத சொற்களைப் பேசுபவன், வாசனை இல்லாத மலருக்குச் சமமானவன். மனதில் நினைப்பதையே சொல்ல வேண்டும். இல்லாவிட்டால், மவுனமாக இருப்பதே மேல்!
ஒரு முட்டாள் நண்பனுடன் சேர்ந்து வாழ்வதை விட நீ தனியாக வாழ்வதே சிறந்தது.
இந்த உலகில் எப்போதும் நிலைத்திருக்கும் சக்தி உண்மைக்குத் தான் உண்டு.
உண்மை என்பது ஒரு இனிமையான உணர்வு. உண்மையின் அருமை தெரியாதவர்கள் இனிமையின் சுகத்தை உணராதவர்கள்.
செல்வத்தின் இயல்பு வளர்வதும் தேய்வதும். செல்வம் என்றைக்கும் ஒரு இடத்தில் நிலைத்திருப்பது கிடையாது.
நீங்கள் ஒரு பூவில் விருப்பப்பட்டால் அதைப் பறித்து விடுவீர்கள். ஆனால் நீங்கள் ஒரு பூவில் அன்பு வைத்தால் தினமும் அதற்குத் தண்ணீர் ஊற்றுவீர்கள்.
உள்ளத்தில் கோபம் இருந்தால் மட்டுமே வெளியில் எதிரி இருக்க முடியும்.
நல்லதைச் செய்ய உங்கள் இதயத்தைத் தயார் செய்யுங்கள். அதை மீண்டும் மீண்டும் செய்யுங்கள், நீங்கள் மகிழ்ச்சியால் நிரப்பப்படுவீர்கள்.
பெரியவர்களை எப்பொழுதும் மரியாதையாக நடத்துபவர்களுக்கு இந்த நான்கும் அதிகரிக்கும். வாழ்க்கை, அழகு, மகிழ்ச்சி, வலிமை.
உங்கள் உடல் விலைமதிப்பற்றது. அது உங்கள் விழிப்புணர்வுக்கான வாகனம். அதைக் கவனமாகக் கையாளுங்கள்.
வானில், கிழக்கு மற்றும் மேற்கு என்ற பாகுபாடு இல்லை, மக்கள் தங்கள் மனதினால் வேறுபாடுகளை உருவாக்கி, பின்னர் அவற்றை உண்மை என்று நம்புகிறார்கள்.
உங்கள் செயல்கள் மட்டுமே உங்கள் உண்மையான உடமைகள்.
சிலந்தி தன் வலைக்குள்ளேயே சுற்றுவதைப் போல் மனிதர்கள் ஆசைகுள்ளே கட்டுண்டிருக்கின்றனர்.
யார் ஒருவர் சிறிய நற்செயல் செய்தாலும் அவரை மனதாரப் பாராட்டுங்கள், அதுவே அவர் மேலும் மேலும் நற்செயல்கள் புரிவதற்கு உந்துதலாக இருக்கும்.
எதனையும் ஆராய்ந்து பகுத்தறிவுக்குப் பொருத்தமானதாக இருந்தால் நம்பு; இல்லையேல் கடவுளே நேரில் வந்து கதறினாலும் பகுத்தறிவுக்குப் புறம்பான சொல்லையோ செயலையோ ஏற்காதே.
தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வரப்படும் பழக்கம் என்பதற்காகவோ, நமது முன்னோர்கள் சொல்லிவைத்து விட்டார்கள் என்பதற்காகவோ எந்த ஒரு கருத்தையும் நாம் சிந்தித்துத் தெளிவு பெறாமல் ஏற்றுக்கொள்ளக் கூடாது!
எதை உன்னிடமிருந்து யாரும் எடுத்துக் கொள்ள முடியாதோ அதுதான் உன்னுடையது. உன்னிடமிருந்து எடுத்துக் கொள்ளலாம் எனும் எதுவும் உன்னுடையது ஆகாது.உன்னுடையது எதுவோ அதனோடு இருந்து விடும் யாரும் அதை உன்னிடம் இருந்து எடுத்துக் கொள்ள முடியாது….
உன்னைக் கோபப்படுத்துவது…ஒருவனுக்கு இன்பத்தைத் தருவதாக இருந்தால்….!பதிலுக்கு நீ கோபப்படாமல் இருப்பது… உனது இன்பமாக இருக்கட்டும்!!
நீ மனிதனாக வாழ்ந்தால் கோயிலுக்குப் போவாய். நீ புனிதனாக வாழ்ந்தால் நீயே கோயிலாவாய்.
ஒன்றும் தெரியாது என்று நினைப்பவனுக்கு கொஞ்சமாவது அறிவு உண்டு. ஆனால், எல்லாம் தெரியும் என்று நினைப்பவன் முழு மூடன்.
உடல் நோயற்று இருப்பது…முதல் இன்பம். மனம் கவலையற்று இருப்பது. இரண்டாவது இன்பம், பிற உயிர்களுக்கு உதவியாக இருப்பது. மூன்றாவது இன்பம்.
மகானைப் போல நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சியின் படி வாழ்ந்தாலே போதும்.
மனதை அடக்க நினைத்தால் அலையும், அதை அறிய நினைத்தால் அடங்கும். தவறு செய்வதும் மனம் தான், இனி தவறு செய்யக் கூடாது என்று தீர்மானிப்பதும் மனம் தான்…
வாழ்க்கையில் ஒருவனுடைய செல்வமோ, அதிகாரமோ அவனை மேலும் மேலும் கீழ் நிலைக்குத் தள்ளி விடுகின்றன
பிறருக்கு கொடுப்பதற்கு எதுவும் இல்லையெனில் கனிவான வார்த்தைகளையாவது பேசுங்கள்
உன்னைத் தவறாகப் புரிந்து கொண்டவரைப் பற்றித் தவறாக எண்ணாதே! மனிதர்க்குள் மனோபாவம் வேறு வேறானது என்பதை அறிந்து அமைதியாக இரு..!!
தியானத்தின் நோக்கம், உன் எண்ணங்களைக் கட்டுப்படுத்துவது அல்ல. எண்ணங்கள் உன்னைக் கட்டுப்படுத்தாமல் இருப்பது.
இங்கே ஆள்பவன் இருக்கும் போதே, அதை ஆள வேண்டிய இன்னொருவன் உருவாகிறான்.
எதைப் பேச வேண்டும் என்பது, அறிவு! அதை எப்போது பேச வேண்டும் என்பது, ஞானம்!
Credits / Sources
கௌதம புத்தர் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்பினால் இந்த இணைய தளத்திற்கு செல்லவும்…. Wikipedia
Main Post Image – Image by katemangostar on Freepik