Bharathiyar quotes in Tamil – பாரதியார் பொன்மொழிகள்

bharathiyar quotes in tamil

History (வரலாறு)

பாரதியார், திசம்பர் 11, 1882-ல் சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். பாரதியாரின் முழுப்பெயர் சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி, இந்தத் தொகுப்பில், பாரதியார் பொன்மொழிகள் (Bharathiyar Quotes in Tamil) மற்றும் பாரதியார் கவிதைகள்-யை காணலாம்…

Bharathiyar Motivational Quotes in Tamil

விழும் வேகத்தை விட எழும் வேகம் அதிகமாக இருந்தால், தோற்கடிக்க அல்ல, உன்னைப் பார்க்கவே எவனும் பயப்படுவான்…


எவனையும் வெற்று காகிதம் என எண்ணாதே…! ஒரு நாள் அவன் பட்டமாய் பறப்பான்


நம்பிக்கை இருக்குமிடத்தில் வெற்றி உண்டாகும் அந்த நம்பிக்கையின் அடிப்படை இலக்கணம் விடாமுயற்சி


எல்லா மனித முயற்சியிலும் ஆரம்பத்தில் தவறு ஏற்படுவது இயல்பானதே.


காலம் பணத்தைப் போல விலை மதிப்பு கொண்டது. ஒருபோதும் பொழுதை வீணாகக் கழிப்பது கூடாது.


உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா? பிரச்சனைகள் வரும்போது அல்ல, பிரச்சனைகளைக் கண்டு நீங்கள் பயந்து விலகும்போது…

துன்பம் நேரும் காலத்தில் உறுதி என்னும் கடிவாளத்தால் மனதை இழுத்து பிடியுங்கள்.


எல்லாவிதமான செல்வங்களுக்கும் அறிவே வேராக இருக்கிறது. அறிவுக் கண் திறந்தால் எதையும் சாதிக்கலாம்.


காயங்கள் குணமாகக் காலம் காத்திரு. கனவுகள் நினைவாகக் காயம் பொறுத்திரு…


மன உறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய கடலுக்கு ஒப்பானது.


எந்தச் சூழ்நிலையிலும் மற்றவருக்கு நீ தாழ்ந்துவிடதே. அவ்வாறு தாழ்வது அவமானத்திற்குரியதாகும்.


அச்சத்தின் வேட்கைதனை அழித்துவிட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்து போகும்.


நாள்தோறும் ஏதேனும் ஒரு காரியத்தில் உடல் வியர்க்கும்படி உழைக்க வேண்டும்.


எந்த ஏற்றத்துக்கும் ஒரு இறக்கம் உண்டு, எந்தத் துன்பத்துக்கும் ஒரு இறுதி உண்டு, எந்த முயற்சிக்கும் ஒரு பலன் உண்டு.


எந்த ஒரு செயலைச் செய்யும் போதும் அச்சமில்லாது துணிவுடன் செய்யுங்கள்.


வாழ்க்கையில் எப்போதும், சமாதானத்தையும் சகிப்புத்தன்மையையும் நமது லட்சியமாகக் கொள்ள வேண்டும்.


இழிசெயல்கள் எதுவும் உங்களைப் பிடித்துத் தம்வழி இழுத்துக் கொண்டு செல்லாதபடி சதாகாலமும் விழிப்புடன் இருப்பீர்களாக, பயமின்றி உழையுங்கள். சலிப்புக்கு மட்டும் ஒருபோதும் இடம் கொடாதீர்கள்.


சென்றதை சிந்திப்பதை விட, இனிமேல் நடக்க இருப்பதை சிந்திப்பவனே புத்திசாலி


உங்களின் மனதைக் கட்டுப்படுத்த முயலுங்கள் அல்லது அதை வெல்ல ஆசைகளை விட்டுவிடுங்கள்


சோம்பலை புறக்கணியுங்கள் உழைப்பின்றி உலகில் எதையும் சாதிக்க முடியாது


தெய்வம் விட்டது நல்வழி என்று எப்போதும் நினையுங்கள். ஆற்றில் மிதக்கும் கட்டை போல மனதை இலகுவாக வைத்திருங்கள்.


எரியும் விளக்கு இருந்தாலும் அதைக் காண கண்கள் வேண்டும். அதுபோல உதவி செய்யப் பலர் உடனிருந்தாலும் சுயபுத்தி இருப்பது அவசியம்.


எந்தத் தொழிலையும் முடியாது என்று கைவிடாதே. திறமையுள்ளவனிடம் பணியாளனாக இருந்தாவது அந்தத் தொழிலைக் கற்றுக் கொள்.


உடல் பலமுடன் இருக்க விரும்பினால், முதலில் மனதை வலிமையாக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.


தன்னம்பிக்கை, உற்சாகம் இரண்டும் இருந்தால் உடம்பில் எந்த வியாதியும் நுழைய முடியாது.


துன்பம் நேரும் போது நடுங்குபவன் மூடன். அவன் எத்தனை படித்தும் அறிவு இல்லாதவனே.


கல்வியையும், தியானத்தையும் எந்த வயதில் தொடங்கினாலும் பலன் உண்டு.


அச்சம் என்பது மரணத்திற்கு சமம், அது இருக்கும் வரையில் நீ அறிவாளியாக இருக்க முடியாது.


நேர்மையும், துணிச்சலும் இருந்தால் தான் நேரான பாதையில் செல்ல முடியும்.


மனிதனுக்குப் பகை வெளியுலகத்தில் இல்லை… பயம் என்னும் பெயரில் மனத்துக்குள்ளையே இருக்கிறது.


மனித முயற்சில் தவறு ஏற்படுவது இயல்பே… ஆனால் அதைத் திருத்திக் கொள்வதே மனிதனுக்கு அழகு.


One Line Quotes

செய்வதை துணிந்து செய்.


தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா.


தமிழ் ஒருவனை சாந்தப்படுத்துவது மட்டும் அல்ல… தமிழ் ஒருவனுக்கு ரௌத்திரத்தையும் பழக்கும்.


நான் வீழ்வேன் என நினைத்தாயோ?


எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துவது நம் கடமை.


பிறர் நம்மைத் தாழ்வாகக் கருதவோ, நடத்தவோ இடம் அளிக்கக் கூடாது.


Love Quotes

அன்பு ஒன்றினால் மட்டுமே உலகிலுள்ள துன்பத்தை எல்லாம் மாற்ற முடியும்.


அன்பு ஒன்றே உலகத்திலுள்ள துன்பத்தை எல்லாம் மாற்றும் வலிமை படைத்தது.


Quotes about Tamil Language

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்.


Bharathiyar Quotes about Life in Tamil

இந்த உலகில் நீங்கள் சில காலம் தங்க வந்திருக்கும் விருந்தினர்தான். எனவே விருந்தாளின் வீட்டில் எப்படி கட்டுப்பாட்டுடனும் அடக்கத்துடனும் நடந்து கொள்வீர்களோ அதுபோலவே நடந்து கொள்ளுங்கள்.


துன்பம் நேரும் சமயத்தில் அதைக் கண்டு சிரிக்கப் பழகுங்கள் அதுவே அத்துன்பத்தை வெட்டும் வாளாகி விடும்…


வீரமும் மானமும் எங்களின் உடமை… வீழ்த்திட நினைப்பது எதிரியின் மடமை…


யாருக்கும் அஞ்சோம், எதற்கும் அஞ்சோம், எங்கும் அஞ்சோம், எப்போதும் அஞ்சோம்


உள்ளத்தில் கர்வம், நுழைந்து விட்டால், தர்மத்தின் பிடியில் இருந்து மனிதன் நழுவி விடுவான்


மனிதன் தனக்குத் தானே நண்பனாகி விட்டால் உலகம் முழுவதும் நண்பனாகும் பாக்கியம் பெறுகிறான்


மனிதனுக்குப் பகை வெளியுலகத்தில் இல்லை பயம் என்னும் பெயரில் மனதிற்குள்ளேயே இருக்கிறது


துன்பம் நேரும் போது நடுங்குபவன் மூடன் அவன் எத்தனை படித்தும் அறிவு இல்லாதவனே


உன் கட்டுப்பாட்டில் உன் உடம்பு இருக்க வேண்டும் இல்லாவிட்டால் நீ மிருகமாகி விடுவாய்


பெற்றோர் தேடிய செல்வத்தில் வாழ்பவனை விடத் தன் சொந்த உழைப்பில் வாழ்பவனே சிறந்தவன்


வீட்டிலும், வெளியிலும் எங்கும் எப்போதும் மனிதன் நேர்மையைப் பின்பற்றி வாழ வேண்டும்.


தன்னை விடப் பலவீனமானவனுக்கு அநியாயம் செய்தால் தப்பில்லை என்று ஒருவன் நினைக்கும் வரை கலியுகம் இருக்கும்.


மற்றவர் உள்ளத்தில் உங்களைப் பற்றிய தவறான மதிப்பு உண்டாவதற்கு ஒருபோதும் இடம் அளித்து விடாதீர்கள்.


பெரிய பெரிய கஷ்டங்கள் பட்ட பிறகு தான் சிறிய உண்மைகள் புரிய ஆரம்பிக்கின்றன.


தான் செய்த குற்றத்தைச் சுண்டைக்காய் போலவும், மற்றவர் குற்றத்தைப் பூசணிக்காய் போலவும் நினைப்பது கூடாது.


குற்றத்துக்குக் காரணம் அறியாமையே. குற்றம் செய்யாமல் இருக்க விரும்பினால் நல்லவர்களுடன் பழக வேண்டும்.


மனிதன் சம்பாதித்து கொள்ள வேண்டிய குணங்களில் மிக முக்கியமானது பொறுமை.


கடவுள் ஒருவரே. அவர் மட்டுமே உண்மையானவர். அவரைப் பலரும் பலவிதமான பெயர்களில் அழைக்கிறார்கள்.


ஊர் ஒற்றுமை கோவில் வழிபாட்டாலும், குடும்ப ஒற்றுமை வீட்டு வழிபாட்டாலும் பலப்படும்.


தர்மத்தை சூது கவ்வினாலும், இறுதியில் வெற்றி பெறுவது தர்மமே ஆகும்.


ஆலம் விழுதுபோல, பிள்ளைகள் பெற்றோரைத் தாங்கிப் பிடிக்க வேண்டும்.


யாருக்கும் பயந்து நமக்குத் தெரிந்த உண்மைகளை மறைக்கவோ, திரிக்கவோ கூடாது.


இலவசமாகக் கிடைக்கும் எதையும் பெற்றுக் கொள்ள புத்திசாலியின் மனம் விரும்புவதில்லை.


சென்றதை சிந்திப்பதை விட, இனிமேல் நடக்க இருப்பதை சிந்திப்பவனே புத்திசாலி.


அன்பு எந்தக் குறையையும் பொறுக்கும்… உண்மையான அன்பு கொண்டவன் யார் மீதும் கோபம் கொள்ள மாட்டான்.


மலர்ந்த முகமும் இனிய சொல்லும் இன்பமாக இருப்பதற்கு வழி வகுக்கும்.


வாழ்க்கையில் எப்போதும், சமாதானத்தையும் சகிப்புத்தன்மையையும் நமது லட்சியமாகக் கொள்ள வேண்டும்.


Common Quotes in Tamil 

தர்மத்தாலும், கருணையாலும் பெறப்படும் வெற்றியே நிலைபெற்று நிற்கும். அதர்மத்தை தர்மத்தாலும், தீமையை நன்மையாலும்தான் வெல்ல முடியும்.


அறிவுடையவர்கள் பெரும்பாலும் அந்த அறிவை ஏழைகளை நசுக்குவதிலும், கொள்ளையிடுவதிலும் உபயோகப்படுத்துகிறார்கள்.


நாத்திகர்கள் கூட இஷ்டதெய்வம் இல்லாவிட்டாலும் வெறுமே தியானம் செய்வது நன்று.


நல்ல வழிகளில் உழைப்பவனுடைய உடம்பு முயற்சி இல்லாமல் சோம்பி படுத்திருக்க நியாயமில்லை.


நீதிநெறியிலிருந்து பிறருக்கு உதவுபவர் மேல் ஜாதியார். மற்றவர் கீழ் ஜாதியர்.


கவலையும், பயமும் எனக்குப் பகைவர். நான் இப்பகைவரை வென்று தீர்த்தேன். அதனால் மரணத்தை வென்றேன்.நான் அமரன்.


கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி.


இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிகமிக உயர்ந்தது பொறுமை.


கோவிலுக்குப் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி, கடவுளை வணங்கினாலும் சரி, வணங்காவிட்டாலும் சரி, தெய்வம் நமக்கு அருள் புரிய தடையேதுமில்லை.பிறரை ஏமாற்றாமல் இருந்தாலே போதும், தெய்வ அருளுக்கு பாத்திரமாகிவிடுவோம்.


கண்ணைத் திறந்து குழியில் விழுவது போல, மனிதன் நல்லதை அறிந்தும் தீமையை விட முடியாமல் தவிக்கிறான்.


பேச்சு ஒரு விதமாகவும், செயல் வேறுவிதமாகவும் நடப்போரின் உறவைக் கனவிலும் நினைக்கவே கூடாது.


கொடுத்த வேலையைச் செய்யாமல் ஆதாயம் பெற முயல்பவன் பிச்சைக்காரனை விடக் கேவலமானவன்.


பழி வாங்கும் எண்ணத்துடன் பிறருக்கு தண்டனை அளிக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.


அதர்மம் இருந்தால் தர்மத்தின் அருமை புரியும். அதனால் தர்மம் இருக்கும் வரை உலகில் அதர்மமும் இருந்தே தீரும்.


பிறருடைய பொருளை அபகரிக்க வேண்டும் என்று மனதில் நினைத்தாலும் கூடப் பாவம் தான்.


உழைத்து வாழ்வது தான் சுகம். வறுமை, நோய் போன்றவை உழைப்பைக் கண்டால் ஓடி விடும்.


மூலைக்கு மூலை உடற்பயிற்சி சாலை அமைத்தால் ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும்.


பள்ளிக்கூடங்கள், தொழிற்சாலைகள் பெருகி விட்டால் சிறைச்சாலைகளின் எண்ணிக்கை குறையும்.


செல்வம் தேட உலகில் பல வழிகள் இருந்தாலும், அவரவர் தகுதியறிந்து தேடுவதே நல்லது.


பிறர் குற்றங்களை மன்னிக்கும் குணம், பெரியவர்களிடம் மட்டுமே இருக்கும்.


பெண்களின் பங்களிப்பு இல்லாமல் வீட்டிலோ, வெளியிலோ எந்தச் செயலும் வெற்றி பெறாது


Credits / Sources

பாரதியாரை பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்பினால் இந்த இணைய தளத்திற்கு செல்லவும்…. Wikipedia

Main Post Image – Image by katemangostar on Freepik

Previous Article

Abdul Kalam Quotes in Tamil – அப்துல்கலாம் பொன்மொழிகள்

Next Article

Buddha Quotes in Tamil – புத்தரின் பொன்மொழிகள்

You might be interested in …

ambedkar quotes in tamil

Ambedkar Quotes in Tamil – அம்பேத்கர் பொன்மொழிகள்

History (வரலாறு) அம்பேத்கர், 14 ஏப்ரல் 1891-இல் ராம்ஜி மாலோஜி சக்பால் மற்றும் பீமாபாய் தம்பதியருக்கு பிறந்தார். அவருடைய முழுப்பெயர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர். இந்தத் தொகுப்பில் அம்பேத்கர் பொன்மொழிகள் (Ambedkar Quotes in Tamil) மற்றும் அவரின் வார்த்தைகளைப் பார்க்கலாம். Ambedkar Quotes in Tamil நீ […]

krishna quotes in tamil

Krishna Quotes in Tamil – கிருஷ்ணர் பொன் மொழிகள்

About Krishna (வரலாறு) இந்து சமய கடவுளாவார். இவர் விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒருவராக வைணவர்களால் கருதப்படுகிறார். இவர் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாகக் கருதப்படுகிறார். மகாபாரத்திலும் பாகவத புராணத்திலும் இவரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்பில், கிருஷ்ணர் பொன் மொழிகள் (Krishna Quotes in Tamil), கிருஷ்ணரின் வார்த்தைகள், எண்ணங்கள் […]

vivekananda quotes in tamil

Vivekananda Quotes in Tamil – சுவாமி விவேகானந்தர் பொன் மொழிகள்

History (வரலாறு) சுவாமி விவேகானந்தர், 12 ஜனவரி 1863- இல் விஸ்வநாத் தத்தா மற்றும் புவனேஸ்வரி தேவி தம்பதியருக்கு பிறந்தார். அவருடைய முழுப்பெயர் நரேந்திரநாத் தத்தா. இந்தத் தொகுப்பில், சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள் (Vivekananda Quotes in Tamil) மற்றும் சுவாமி விவேகானந்தர் எண்ணங்களைக் காணலாம்… Positive Vivekananda […]