Ambedkar Quotes in Tamil – அம்பேத்கர் பொன்மொழிகள்

ambedkar quotes in tamil

History (வரலாறு)

அம்பேத்கர், 14 ஏப்ரல் 1891-இல் ராம்ஜி மாலோஜி சக்பால் மற்றும் பீமாபாய் தம்பதியருக்கு பிறந்தார். அவருடைய முழுப்பெயர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர். இந்தத் தொகுப்பில் அம்பேத்கர் பொன்மொழிகள் (Ambedkar Quotes in Tamil) மற்றும் அவரின் வார்த்தைகளைப் பார்க்கலாம்.

Ambedkar Quotes in Tamil

நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும் போது… உன்னை அழிக்கும் ஆயுதமாக நான் மாறிவிடுவது என் கடமை.


லட்சியங்களுக்கு விசுவாசமாக நடப்பதற்கு பதிலாக, கட்டளைகளுக்கு இயங்க நடப்பதே வாழ்க்கை ஆகி விடுகிறது.


ஆயிரம் ஆண்டுக் காலம் அடிமையாக வாழ்வதை விட, அரை நிமிடமேனும் சுதந்திர மனிதனாக வாழ்ந்து இறப்பது சாலச் சிறந்தது!


மற்றவர்களின் எல்லா தேவைகளையும் நிவர்த்தி செய்தால் தான் உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால், அந்தப் பெயர் ஒருபோதும் தேவையில்லை.


ஒரு மனிதனின் சிறந்த அடையாளம் சுயமரியாதை. இதை இழந்து வாழ்வது தான் பெரிய அவமானம்.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை, உன் பிள்ளையின் கல்விக்கு செலுத்து அது உனக்குப் பயன் தரும்.


கடவுளுக்குக் கொடுக்கும் காணிக்கையை விட ஏழைகளுக்குக் கொடுக்கும் கல்வி மேலானது.


ஒருவன் கற்ற கல்வியை விட அவனுடைய பண்பு முக்கியமானது.


மனித வாழ்க்கை, கடலில் சேரும் போது தன் அடையாளத்தை இழக்கும். ஒரு துளி நீர் போன்றது அல்ல. இந்தச் சமுதாயத்தில் அவன் சுதந்திரமான வன். அவன் பிறந்தது சமுதாயத்தின் வளர்ச்சிக்காக மட்டும் அல்ல, தன் சுய வளர்ச்சிக்காகவும் தான்…


மனதை வளர்ப்பதே வாழும் மனித இனத்தின் இறுதி இலக்காகும்


Motivational Ambedkar Quotes in Tamil

விதியை நம்பாமல், உங்கள் பலத்தை நம்புங்கள்.


அறிவை தேடி ஓடுங்கள். நாளைய வரலாறு உங்கள் நிழலாகத் தேடி ஓடி வரும்.


ஒருவர் தனது மனதையும், வலிமையையும் தன்னுடைய இலக்கை அடைய பயன்படுத்த வேண்டும்


மாபெரும் லட்சியத்தையும், வெற்றியில் நம்பிக்கையையும், வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்!


வெற்றியோ, தோல்வியோ எதுவாயினும் கவலை வேண்டாம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும், கடமையைச் செய்வோம். நமது திறமையும் நேர்மையும் வெளியாகும் போது எதிரியும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.


வாழ்க்கை நீண்டதாக இருப்பதை விடச் சிறப்பாக இருக்க வேண்டும்.


ஒரு லட்சியத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.


உலகில் யாரும் தெய்வீக குணங்களுடன் பிறப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொறுத்து தான் முன்னேற்றமோ வீழ்ச்சியோ ஏற்படுகிறது.


சிறந்த எதிர்காலத்தை உருவாக்கத் தற்போதைய இன்பங்களைத் தியாகம் செய்து பாடுபடுங்கள். குறிக்கோளை எட்டும் வரை தீ போல் சுடும், கடும் துன்பங்களை ஏற்று தியாகம் செய்யுங்கள்.


ஆடுகளைத் தான் கோயில்களின் முன் வெட்டுகிறார்களே தவிர சிங்கங்களை அல்ல… ஆடுகளாக இருக்க வேண்டாம் சிங்கங்களாக வீறு கொண்டு எழுங்கள்.


சுயமரியாதையை அழித்து எந்த இனத்தையும் வளர்க்க முடியாது.


ஒன்றும் செய்யாமல் கருவேலமரம் போல் வாழ்வதை விட, ஒரு பெரிய காரணத்திற்காக இளமையில் இறப்பது சிறந்தது.


வரலாற்றை மறப்பவர்களால் வரலாற்றை உருவாக்க முடியாது.


அறிவு ஒரு மனிதனின் வாழ்க்கையின் அடித்தளம்.


இந்த உலகில் சுயமரியாதையுடன் வாழக் கற்றுக்கொள்.


உலகில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற லட்சியத்தை ஒருவர் எப்போதும் போற்ற வேண்டும்.


மனிதன் நெருப்பை உண்டாக்குவதற்கு எரிகல்லின் துண்டுகளைத் தேய்க்க வேண்டும்.


மனிதன் அவனுடைய மனதால் உருவாக்கப் படுகிறான்


Ambedkar Ponmozhigal in Tamil / Ambedkar Words in Tamil

அறிவு, நன்னடத்தை, சுயமரியாதை இவையே நான் வணங்கும் தெய்வங்கள். இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.


மகாத்மாக்கள் வந்தார்கள், மகாத்மாக்கள் மறைந்தார்கள். ஆனால் தீண்டாமை இன்னும் அப்படியே தான் இருக்கிறது.


எப்போதோ சொன்ன ஒரே கருத்தை, சிந்தனையுள்ள எந்த மனிதனும் பிடித்துக் கொண்டிருக்கமாட்டான்.


நான் யாருக்கும் அடிமையில்லை. எனக்கு யாரும் அடிமை இல்லை.


குழந்தைப் பேறு சமயத்தில் பெண்கள் பட வேண்டியுள்ள வேதனைகளை ஆண்கள் பட வேண்டியிருந்தால், அவர்களில் யாரும் வாழ்நாளில் ஒரு முறைக்குமேல் குழந்தை பெற இணங்கமாட்டார்கள்.


எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதனை நான் புரிந்து கொள்ளவில்லை என்றால் நான் மனிதனே இல்லை.


ஒருவரின் கல்வி ஏழைகளின் நலனுக்குக் கேடு விளைவித்தால், அவன் சமுதாயத்திற்கு ஒரு சாபக்கேடு.


கல்வி என்பது ஆண்களுக்கு எவ்வளவு அவசியமோ, அதே அளவு பெண்களுக்கும் அவசியம்.


அரசியலமைப்பு என்பது வெறும் வழக்கறிஞர்களின் ஆவணம் அல்ல, அது வாழ்க்கையின் வாகனம் மற்றும் அதன் ஆவி எப்போதும் வயதின் ஆவி.


சட்டம் அனைத்து உலக மகிழ்ச்சியின் உறைவிடம்.


அரசியல் சாசனம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை நான் கண்டால், அதை முதலில் எரிப்பவன் நான்.


ஏழைகள், தங்களின் துன்பங்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்டவை என்ற முட்டாள்தனமான நம்பிக்கையை எவ்வளவு சீக்கிரம் நீக்கிவிடுகிறார்களோ அவ்வளவு நல்லது


அரசியல் அதிகாரம் அனைத்து சமூக முன்னேற்றத்திற்கும் முக்கியமாகும்.


சமாதானப்படுத்துதல் என்பது ஆக்கிரமிப்பாளரின் அதிருப்திக்கு ஆளான அப்பாவிகளுக்கு எதிராகக் கொலை, தீ வைப்பு மற்றும் கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபடுவதன் மூலம் அவரை விலைக்கு வாங்குவதாகும்


ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை அந்தச் சமூகத்தில் வாழும் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை வைத்து அளவிடுகிறேன்.


கணவன்-மனைவி இடையேயான உறவு என்பது நெருங்கிய நண்பர்கள் போல் இருக்க வேண்டும்.


மனித உடல் ஏன் இறந்து போகிறது? காரணம், மனித உடல் துன்பத்திலிருந்து விடுபடாதவரை மனம் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. ஒரு மனிதனுக்கு உற்சாகம் இல்லாவிட்டால் அவனது உடலோ மனமோ இறந்த நிலையில் இருக்கும்


அரசை அமைப்பவர்களுக்குள் ஒற்றுமை உணர்வு இல்லாமல் ஜனநாயகம் இயங்காது.


அடிமைத்தனத்தை அழிப்பதற்காகத் தங்கள் நேரத்தையும், திறமைகளையும், அனைத்தையும் அர்ப்பணிப்பவர்கள் இறையருள் பெற்றவர்கள்.


தற்போதைய வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க, ஒருவர் இயல்பான தன்மை, அகிம்சை (அஹிம்சை), சமத்துவம் மற்றும் உலகளாவிய சகோதரத்துவம் ஆகிய நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். இது புத்தர் போதித்த நித்திய உண்மை.


வரலாற்றை உருவாக்குவதில் மனிதன் ஒரு காரணி அல்ல என்று கருதுவது மிகவும் தவறானது.


ஒரு தாவரத்திற்கு நீர்ப்பாசனம் தேவைப்படுவது போல் ஒரு யோசனைக்கு இனப்பெருக்கம் தேவை. இரண்டும் இல்லையெனில் வாடி இறந்துவிடும்


Credits / Sources

அம்பேத்கரை பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்பினால் இந்த இணைய தளத்திற்கு செல்லவும்…. Wikipedia

Main Post Image – Image by katemangostar on Freepik

Previous Article

Christmas Wishes in Tamil | இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

Next Article

Kaanum Pongal Wishes in Tamil | காணும் பொங்கல் வாழ்த்துக்கள்

You might be interested in …

krishna quotes in tamil

Krishna Quotes in Tamil – கிருஷ்ணர் பொன் மொழிகள்

About Krishna (வரலாறு) இந்து சமய கடவுளாவார். இவர் விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒருவராக வைணவர்களால் கருதப்படுகிறார். இவர் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாகக் கருதப்படுகிறார். மகாபாரத்திலும் பாகவத புராணத்திலும் இவரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்பில், கிருஷ்ணர் பொன் மொழிகள் (Krishna Quotes in Tamil), கிருஷ்ணரின் வார்த்தைகள், எண்ணங்கள் […]

bible verses in tamil

Bible Verses in Tamil – தமிழ் பைபிள் வசனங்கள்

About தமிழ் விவிலியம் என்பது யூதர்களும் கிறித்தவர்களும் தம் சமய மரபுக்கு அடித்தளமாகக் கருதுகின்ற விவிலியம் என்னும் திருநூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உருவான எழுத்துப் படைப்பைக் குறிக்கும். இந்தத் தொகுப்பில் தமிழ் பைபிள் வசனங்கள் (Bible Verses in Tamil)-ஐ விரிவாகக் காணலாம் Bible Verses in Tamil […]

life quotes in tamil

Life Quotes in Tamil – வாழ்க்கை கவிதைகள்

வாழ்க்கை கவிதைகள் தொகுப்பு: இந்தத் தொகுப்பில், வாழ்க்கை கவிதைகள் (Life Quotes in Tamil) மற்றும் வலிகள் நிறைந்த வாழ்க்கை கவிதைகள், தமிழில் நேர்மறை வாழ்க்கை மேற்கோள்கள், வாழ்க்கை அறிவுரைகள் மற்றும் பல வாழ்க்கை கவிதைகளைப் பார்க்கலாம்… Life Quotes in Tamil  வாழ்க்கையில் யாரையும் குறைவாக எடை […]