Abdul Kalam Quotes in Tamil – அப்துல்கலாம் பொன்மொழிகள்

abdul kalam quotes in tamil

History (வரலாறு)

ஏ. பி. ஜே. அப்துல் கலாம், 15 அக்டோபர் 1931- இல் ஜைனுலாப்தீன் மற்றும் ஆஷியம்மா தம்பதியருக்கு 5வது குழந்தையாகப் பிறந்தார். அவருடைய முழுப்பெயர் ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம். இந்தத் தொகுப்பில், அப்துல்கலாம் பொன்மொழிகள் (Abdul Kalam Quotes in Tamil) மற்றும் அப்துல் காலம் கவிதைகளைப் பார்க்கலாம்…

Positive Abdul Kalam Quotes in Tamil

வாய்ப்புக்காகக் காத்திருக்காதே. உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக்கொள்.


ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல. உன்னைப் போலச் சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே.


வெற்றிகரமான கணிதம் கூடப் பூஜ்ஜியத்தில் தான் தொடங்கும் என்பதால், முதல் முயற்சியில் தோல்வியடைந்துவிடுமோ! என்று பயப்பட வேண்டாம்.


நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை… நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால்… நீ எண்ணியது உன்னை வந்து சேரும்… நீ நீயாக இரு…!


உங்களால் உங்கள் எதிர்காலத்தை மாற்ற முடியாது, ஆனால் உங்களால் உங்கள் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ள முடியும், மேலும் உங்கள் பழக்கவழக்கங்கள் நிச்சயமாக உங்கள் எதிர்காலத்தை மாற்றிவிடும்.


மழையின் போது அனைத்து பறவைகளும் மறைவிடத்தைத் தேடுகின்றன. ஆனால் கழுகு மேகங்களுக்கு மேலே பறப்பதன் மூலம் மழையைத் தவிர்க்கிறது. சிக்கல்கள் பொதுவானவை தான், ஆனால் அணுகுமுறை வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.


காலத்தின் மணல் பரப்பில் உன் கால்சுவடுகளைப் பதிக்க விரும்பினால், உன் கால்களை இழுத்து இழுத்து நடக்காதே!


ஒருநாள் நிச்சயம் விடியும். அது உன்னால் மட்டும் முடியும்.


இமயத்தின் உச்சியை எட்டித் தொடுவதாயினும் சரி அல்லது உன் வாழ்க்கைப் பணியின் உச்சத்தை அடைவதாயினும் சரி, மேலே ஏறிச் செல்ல ஒருவருக்கு மிக்க மனவுறுதி தேவைப்படுகிறது.


நம் அனைவருக்கும் ஒரே மாதிரித் திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன…!


உன் கைரேகையை பார்த்து எதிர் காலத்தை நிர்ணயித்து விடாதே. ஏனென்றால் கையே இல்லாதவனுக்கு கூட எதிர்காலம் உண்டு.


உலகிற்கு ஏற்றாற் போல் தன்னை மாற்றிக்கொள்கின்றனர் பலர்; ஆனால் தனக்கு ஏற்றாற் போல், உலகையே மாற்றிக்கொள்கின்றனர் சிலர்.


உலகம் உன்னை அறிவதைவிட, உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்!


என்னால் முடியும், நம்மால் முடியும், இந்தியாவால் முடியும் இந்த வாசகத்தை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.


கனவு காணுங்கள், கனவு காணுங்கள், கனவு காணுங்கள். கனவுதான் சிந்தனையாகவும், சிந்தனைதான் செயலாகவும் மாறுகிறது.


சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை, துன்பங்களைச் சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை.


பிரச்சனையைச் சகித்துக்கொள்ளாமல், எதிர்கொண்டு சமாளியுங்கள்.


அற்ப சந்தோஷங்களுக்காக ஓடுவதைவிட, உயர்ந்த இலட்சியங்களுக்காகப் பாடுபடுவது சாலச் சிறந்தது!


அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்தெடுங்கள். அதுதான் உண்மையான தலைமைப் பண்பு.


வானத்தைப் பாருங்கள். நாம் தனித்து இல்லை. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நம்மிடம் நட்பாக உள்ளது. கனவு காண்பவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் மட்டுமே அது சிறந்தவற்றை வழங்குகிறது.


புதிய விஷயங்களைப் படைக்க வேண்டும் என இலட்சியம் உள்ளவர்களுக்கு, அவர்களது வேட்கையே ஊக்கமாக அமையும். மற்றவர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் தேவையில்லை.


உங்களிடம் கேளுங்கள். நீங்கள் எதற்காக நினைவுகூறப்பட விரும்புகிறீர்கள்?


மரியாதை இல்லாத இடத்தில் சற்று ஒதுங்கியே இரு. நாளை உன் மதிப்பு தெரிந்த பின் அவர்களே உன்னைத் தேடி வருவார்கள். அதுவரை சற்று பொறுமையாய் இரு.


சுறுசுறுப்பாக இருங்கள், பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள், நீங்கள் நம்பும் விஷயங்களுக்காக வேலை செய்யுங்கள். நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால், உங்கள் தலைவிதியை மற்றவர்களிடம் ஒப்படைக்கிறீர்கள்.


Motivational Abdul Kalam Quotes

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்… ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்…!


நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதும் மண்டியிடுவதில்லை


உங்களுக்குள் இறக்கைகள் உள்ளன. தவழ முயற்சிக்காதீர்கள். பறக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உச்சத்திற்கு பறந்து செல்லுங்கள்.


கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே… அது உன்னைக் கொன்றுவிடும்… கண்ணைத் திறந்து பார் நீ அதை வென்று விடலாம்…!


வாழ்க்கை என்பது ஒரு சந்தர்ப்பம் – நழுவ விடாதிருங்கள், ஒரு கடமை – நிறைவேற்றுங்கள், ஒரு இலட்சியம் – சாதியுங்கள், ஒரு சோகம் – தாங்கிக்கொள்ளுங்கள், ஒரு போராட்டம் – வென்று காட்டுங்கள், ஒரு பயணம் – நடத்தி முடியுங்கள்


இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.


கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை, கனவு மட்டும் காண்பவர்கள் தான் தோற்கிறார்கள்.


நீங்கள் சூரியனைப் போலப் பிரகாசிக்க வேண்டுமானால், முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும்.


சோதனைகளை மீறிய சாதனையில்தான் மகிழ்ச்சி இருக்கிறது!


பிரச்சனைகளைச் சகித்துக் கொள்ளாமல் எதிர்கொள்ளத் துணியுங்கள். பயந்தால் வரலாறு படைக்க முடியாது.


கரைகளைக் கடக்கும் துணிவிருந்தால்தான் புதிய கடல்களைக் கண்டுபிடிக்க முடியும். கடின உழைப்பு, நேர்மைக்கு மாற்று எதுவும் இல்லை; நிச்சயமாக எதுவும் இல்லை.


நம்பிக்கை மற்றும் கடின உழைப்பு இரண்டும் தோல்வி எனும் நோயைக் கொல்ல சிறந்த மருந்து. இது உங்களை ஒரு வெற்றிகரமான நபராக மாற்றும்.


நீங்கள் புகழுடன் பிறந்தால், அது ஒரு விபத்து. நீங்கள் புகழுடன் இறந்தால், அது ஒரு சாதனை.


முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுத்துவிடாதே! அடுத்தமுறை தோல்வியுற்றால், உன் முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால்தான் கிடைத்தது என்பர்!


Success Quotes in Tamil

நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு நதிபோல… ஒரு இடத்தில் வெற்றி காத்திருக்கும் கடலாக…


வெற்றி பெற்றவர்களின் கதைகள் உங்களுக்கு வெறும் தகவல்களை மட்டுமே அளிக்கும். தோல்வி அடைந்தவர்களின் கதை தான் வெற்றி பெறுவதற்கான வழிகளைச் சொல்லும்.


முடியாது என்று நீ சொல்வதையெல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டிருக்கிறான்.


தோல்விகளை எதிர்கொள்ளக் கற்றுக் கொள்ளுங்கள். அதுதான் வெற்றிக்கான மிக முக்கியமான திறமை.


சவாலுக்கே தெரிவியுங்கள், நீங்களும் வீழ்த்தமுடியாத ஒரு சவலானவர் தான் என்று.


ஈடுபாடின்றி வெற்றி இல்லை! ஈடுபாட்டினால் தோல்வியும் இல்லை! சிந்தனை செய்யுங்கள், அதுவே மூலதனம்! வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள் பற்றிக் கவலை வேண்டாம்!


வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான், வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.


நீ கடவுளின் குழந்தை என்பதால் உனக்கு என்ன நடந்தாலும் அதையெல்லாம் விட நீ சிறந்தவன், உயர்ந்தவன் என்ற உறுதி வேண்டும்.


வெற்றி என்பது உன் நிழல்போல. நீ அதைத் தேடிப்போக வேண்டியதில்லை. நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது, அது உன்னுடன் வரும்!


நீ கடவுளின் குழந்தை என்பதால் உனக்கு என்ன நடந்தாலும் அதையெல்லாம் விட நீ சிறந்தவன், உயர்ந்தவன் என்ற உறுதி வேண்டும்.


முயற்சிகள் தவறலாம்… ஆனால் முயற்சிக்க தவறாதே.


வெல்வோம், சாதிப்போம். வேதனைகளைத் துடைத்தெறிவோம் எந்தை அருளால் எதுவும் வசமாகும்.


வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நிர்ணயிப்பதுதான் பிரச்சினை. வாட்டி வதைத்தாலும் கடுமையாகப் பாடுபட்டால்தான் பிரச்சனைகளோடு மல்லுக்கு நின்று தீர்வு காண முடியும்.


மனிதனுக்கு கஷ்டங்கள் தேவையானது, ஏனெனில் வெற்றியை அனுபவிப்பதற்கு அவை அவசியமானது.


வெற்றியின் ரகசியம் என்ன? சரியான முடிவுகள். சரியான முடிவுகளை நீங்கள் எவ்வாறு எடுக்கிறீர்கள்? அனுபவம் மூலம். அனுபவத்தை நீங்கள் எவ்வாறு பெறுகிறீர்கள்? தவறான முடிவுகள் மூலம்.


Education Quotes in Tamil

இளைஞர்களின் அறிவுச் சுடரை ஏற்ற வேண்டிய ஒரு பெரிய பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியருக்கும் உண்டு.


ஒரு நல்லப் புத்தகம் நூறு நல்ல நண்பர்களுக்குச் சமம். ஆனால் ஒரு நல்ல நண்பன் ஒரு நூலகத்திற்கே சமம்.


Quotes for Students in Tamil

மாணவர்களின் மிக முக்கியமான இலக்கணம், கேள்வி கேட்பதே.


நாட்டின் மிகச்சிறந்த மற்றும் திறமை மிக்க மூளைகள் பள்ளியறையின் கடைசி பெஞ்சில் இருக்கதான் வாய்ப்பு அதிகம்.


கற்றலின் ஒரு அங்கமாகத் தவறுகளை அனுமதிக்க வேண்டும். தவறே செய்யக் கூடாது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. துணிச்சலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம்.


எப்போதும் வித்தியாசமாகச் சிந்திக்க துணிவு வேண்டும். தனித்துவமாக இருக்க வேண்டும்.


குழந்தைகள் தனித்துவமாக இருக்க போராடிக் கொண்டிருக்கும் வேளையில், அவர்களைச் சுற்றியுள்ள உலகம் அவர்களை எல்லோரையும் போல் காட்ட எல்லா வழிகளிலும் முயற்சிக்கிறது.


Life Quotes in Tamil

சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.


தவறான காரியங்களை ஒரு போதும் செய்யக் கூடாது. ஒரு இலக்கை நோக்கிச் செல்லப் பலவழிகள் இருந்தாலும் நேர்மையான வழியே மிகச்சிறந்த வழி என்பதுடன் அது மட்டுமே வழியாக இருக்க வேண்டும்.


எப்போதும் வித்தியாசமாகச் சிந்திக்க துணிவு வேண்டும். தனித்துவமாக இருக்க வேண்டும்.


கால எல்லையைத் தவிர வேறு எந்த விதத்திலும் ஒருவரின் அறிவாற்றலை அபகரிக்க இயலாது.


உன் வாழ்வினுள் வரும் அனைத்து சங்கடங்களும் உன்னை அழிக்க வரவில்லை, உன் திறமையையும் மற்றும் உள்மன சக்தியையும் வெளிபடுத்த ஒரு வாய்ப்பை அளித்துச் செல்கிறது.


சரியான காரியத்தைச் செய்ய எளிமையான வழி என்ன என்று என்னிடம் கேட்கிறார்கள். தாயின் முகத்தில் புன்னகை அரும்ப செய்யும் காரியத்தைச் செய்யுங்கள். அதனை நேர்மையாகவும், கடின உழைப்புடனும் செய்யுங்கள்.


ஒரு மனிதனின் அழகானது அவனது நிறமோ, பணமோ அல்ல! அவனது அன்பான குணமும் சாந்தமான மனதும் தான் அழகு!


உன்னால் மாற்ற முடியாததை அப்படியே ஏற்றுக் கொள்ள பழகிக்கொள்.


நீ கடைசியாய் செய்த தவறு தான் இப்போது உன்னுடைய முதன்மையான ஆசான்.


வேலைநாட்களில் அன்றாட கூச்சல், குழப்பம், சந்தடியெல்லாம் அடங்கியதும் ஆற, அமரச் சிந்தித்து அடுத்து வரப்போகும் புத்தம் புது நாளை எதிர்கொள்வதற்கு உன்னை நீ செம்மையாகத் தயார் செய்து கொண்டால் எதிர்காலத்தில் நீ வெற்றிகரமான தலைவர்தான்!


தங்களுடைய தொழிலில் சிகரத்தை எட்ட விரும்புகிறவர்களுக்குத் தேவையான அடிப்படைத் தகுதி முழுமையான பொறுப்புணர்வு. தன்னால் முடிந்த தனது சக்தி முழுவதையும் பயன்படுத்திப் பாடுபடும் ஆசை வந்துவிட்ட ஒருவரிடம் வேறு எந்த ஆசைக்கும் இடமிருக்காது!


நீ அழுது உன் தாய் சிரித்த தினம் உண்டெனில் அது உன் பிறந்த நாளாக மட்டுமே இருக்கும்.


வாரிசு அடிப்படையில் ஒருவர் தலைமை இடத்துக்கு வரலாம். ஆனால் தலைவருக்கான தகுதிகளை ஒருவர் சொந்தமாக மட்டுமே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.


Abdul Kalam Kavithai in Tamil 

கிளி வளர்த்தேன் பறந்து விட்டது. அணில் வளர்த்தேன் ஓடி விட்டது. மரம் வளர்த்தேன் இரண்டும் திரும்பி வந்து விட்டது.


துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு. ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே.


ஒரு மனிதனை ஜெயிப்பதைவிட அவன் இதயத்தைக் கொள்ளை கொள்வது சிறந்தது!


நீண்ட நாள் முழுவதும் கணத்திற்கு கணம், நேர்மையாய் துணிவாய், உண்மையாய், உழைக்கிறவன் கரங்களே அழகிய கரங்கள்!


பல்லாண்டுகளுக்கு முன் என்ன செய்தோமோ அதையே மீண்டும் மீண்டும் தொடர்ந்து செய்வது தோற்கடிக்கப்பட்ட பாதையில் பயணிப்பதை போன்றதாகும்.


எங்கே இதயத்தில் அறம் ஒழுக்கம் இருக்கிறதோ, அங்கே செயல்பாட்டில் அழகு இருக்கும். எங்கே செயல்பாட்டில் அழகு இருக்கிறதோ, அங்கே வீட்டில் ஒத்திசைவு இருக்கும். எங்கே வீட்டில் ஒத்திசைவு இருக்கிறதோ, அங்கே தேசத்தில் ஒழுங்கு இருக்கும். எப்போது தேசத்தில் ஒழுங்கு இருக்கிறதோ, அப்போது உலகில் அமைதி நிலவும்.


சிரிக்கத் தெரிந்த ஒரே இனம் மனித இனம் தான். ஆரோக்கியத்திற்கான பல்வேறு சுவைகளில் நகைச்சுவையும் ஒன்று.


ஒருவர் தன்னைத்தானே ஆராய்ந்து பார்க்கும்போது தான் காண்பதைத் தவறாக எடைப்போடக்கூடும். பெரும்பாலானோரின் நோக்கங்கள் நல்லபடியாக இருப்பதால், தாங்கள் என்ன செய்தாலும் அது நல்ல விஷயம் தான் என்றே முடிவு செய்துவிடுகிறார்கள். எந்த ஒரு நபரும் நேர்மையோடும் நியாயத்தோடும் தன்னை எடை போட்டுப் பார்ப்பதில்லை.


அம்மா மகிழ்ச்சியாக இருக்கும்போது, குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கிறது. குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்போது, தேசம் மகிழ்ச்சியாக இருக்கிறது.


Abdul Kalam Thoughts in Tamil 

ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகின்றான். ஆனால் ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று பெருமிதம் கொள்ளும் தருணத்தில் முட்டாளாகின்றான்.


நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு. உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு.


ஒருமுறை வந்தால் கனவு! இருமுறை வந்தால் ஆசை! பலமுறை வந்தால் இலட்சியம்!


நீ செல்லும் பாதைகளில் தடைகள் ஏதும் இல்லை என்றால் அது நீ செல்லும் பாதை அல்ல, யாரோ ஒருவர் சென்ற பாதை.


மிக உயர்ந்த லட்சியம், மனிதர்களுக்கான எல்லை என்ற சுவர்களைத் தகர்க்கிறது.


ஒரு தேசம் ஊழலில்லாமலும், அறிவாளிகளின் தேசமாகவும் இருக்க மூன்று பேரால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தந்தை, தாய், ஆசிரியர்தான் அந்த மூன்று பேர்.


இசையும், நடனமும் உங்களை மற்றொரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். உங்களுக்கு மகிழ்ச்சியும், அமைதியும் தென்றலாக வீசச் செய்யும்.


என்னைப் பொறுத்தவரை, எதிர்மறையான அனுபவம் என்று எதுவும் இல்லை.


உங்களைச் சுற்றியுள்ள சூழல் என்னவாக இருந்தாலும், உங்களின் நேர்மையைக் கடைப்பிடிப்பது எப்போதும் சாத்தியமாகும்.


நான் ஒரு அழகான பையன் அல்ல, ஆனால் உதவி தேவைப்படும் ஒருவருக்கு, என்னால் கைக்கொடுத்து உதவ முடியும். அழகு முகத்தில் இல்லை, இதயத்தில் இருக்கிறது.


எந்தவொரு பிரச்சினைக்கும் நிச்சயமாகப் போர் ஒரு நிரந்தரத் தீர்வு அல்ல.


பொருளாதாரம் என்னை ஒரு சைவ உணவு உண்பவராக மாறக் கட்டாயப்படுத்தியது, ஆனால் இறுதியாக நான் அதை விரும்ப ஆரம்பித்தேன்.


Credits / Sources

அப்துல்கலாமை பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்பினால் இந்த இணைய தளத்திற்கு செல்லவும்…. Wikipedia

Main Post Image – Image by katemangostar on Freepik

Next Article

Bharathiyar quotes in Tamil – பாரதியார் பொன்மொழிகள்

You might be interested in …

bharathiyar quotes in tamil

Bharathiyar quotes in Tamil – பாரதியார் பொன்மொழிகள்

History (வரலாறு) பாரதியார், திசம்பர் 11, 1882-ல் சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். பாரதியாரின் முழுப்பெயர் சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி, இந்தத் தொகுப்பில், பாரதியார் பொன்மொழிகள் (Bharathiyar Quotes in Tamil) மற்றும் பாரதியார் கவிதைகள்-யை காணலாம்… Bharathiyar […]

bible verses in tamil

Bible Verses in Tamil – தமிழ் பைபிள் வசனங்கள்

About தமிழ் விவிலியம் என்பது யூதர்களும் கிறித்தவர்களும் தம் சமய மரபுக்கு அடித்தளமாகக் கருதுகின்ற விவிலியம் என்னும் திருநூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உருவான எழுத்துப் படைப்பைக் குறிக்கும். இந்தத் தொகுப்பில் தமிழ் பைபிள் வசனங்கள் (Bible Verses in Tamil)-ஐ விரிவாகக் காணலாம் Bible Verses in Tamil […]

sad quotes in tamil

Sad Quotes in Tamil – சோக கவிதைகள்

சோக கவிதைகள் தொகுப்பு: இந்தத் தொகுப்பில், சோக கவிதைகள் (Sad Quotes in Tamil) மற்றும் காதல் வலி கவிதைகள், திருமண வலி கவிதைகள் மற்றும் பல சோக கவிதைகளைப் பார்க்கலாம்… Sad Quotes in Tamil என் விதி என்னவென்று தெரியவில்லை, எல்லா சோதனைகளையும் என்னிடமிருந்தே தொடங்குகிறான் […]